[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை - அமைச்சர் செங்கோட்டையன்
  • BREAKING-NEWS 5 ஆண்டுகள் விரைவாக சென்றுவிடும் என்பதால் அடுத்த பிரதமராக ராகுல் காந்தி நிச்சயம் வருவார்- திருநாவுக்கரசர்
  • BREAKING-NEWS சென்னை உட்பட தமிழகம் முழுவதும் தனியார் குடிநீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்த வேலைநிறுத்தம் தற்காலிக வாபஸ்
  • BREAKING-NEWS காவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்பதை வலியுறுத்த தமிழக அரசு முடிவு
  • BREAKING-NEWS பல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே? - டிடிவி தினகரன்

“வன்முறைக்கு காரணம் அமித் ஷா..!” - தேர்தல் ஆணையத்தை கடுமையாக சாடிய மம்தா

amit-shah-was-reason-for-kolkata-violence-mamata-banerjee

வன்முறைக்கு காரணமான பாஜக தலைவர் அமித் ஷா மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காதது ஏன் ? என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் பாஜக சார்பில் அமித் ஷா பங்கேற்ற பேரணியின் போது கலவரம் ஏற்பட்டது. இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டதால், நாளையோடு பரப்புரையை முடித்துக்கொள்ள வேண்டும் என அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

இந்நிலையில், பேட்டியளித்து மம்தா பானர்ஜி, “பிரதமர் மோடிக்கு எதிராக தொடர்ந்து பேசி வருவதால் மேற்கு வங்கத்தை பாஜக குறி வைத்துள்ளது. தேர்தல் ஆணையத்தை மிரட்டும் வகையில் மேற்கு வங்கத்தில் அமித் ஷா பேட்டியளித்துள்ளார். அமித் ஷா தனது பொதுக்கூட்டத்தின் மூலம் வன்முறையை தூண்டியுள்ளார். 

மேற்கு வங்கத்தில் நடந்த வன்முறைக்கு பிரதமர் மோடி இதுவரை எந்த வருத்தமும் தெரிவிக்கவில்லை. தேர்தல் ஆணையம் பாஜகவின் கீழ் செயல்படுகிறது. வன்முறைக்கு காரணமான அமித் ஷா மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காதது ஏன் ? தேர்தல் ஆணையத்தின் முடிவு நியாயமற்றது, அரசியல் சார்பு கொண்டது. மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி மட்டும் தனது பரப்புரையை முடிக்க ஏதுவாக நேரம் வழங்கப்பட்டுள்ளது” என்று குற்றம்சாட்டினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close