[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே? - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது
  • BREAKING-NEWS சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது

பசியால் உயிரிழந்த 300க்கும் மேற்பட்ட காட்டெருதுகள்!

melting-snow-bares-sikkim-yak-tragedy

கடுமையான பனிப்பொழிவால் உணவின்றி பசியால் வாடி 300க்கும் மேற்பட்ட காட்டெருதுகள் உயிரிழந்துள்ளதாக சிக்கிம் அரசு தெரிவித்துள்ளது.

வடக்கு சிக்கிமின் 15ஆயிரம் அடி உயரத்தில் உள்ள பகுதிகளில் காட்டெருதுகள் வாழ்ந்து வருகின்றன. கடுமையான பனிக்காலங்களில் காட்டெருதுகள் உணவு தேடி செல்லாமல் ஒரே இடத்தில் முடங்கிவிடுகின்றன. சில நாட்களில் பசி காரணமாகவே விலங்குகள் உயிரிழந்துவிடுவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் டிசம்பர் மாதம் முதல் உணவின்றி பசியால் வாடி 300க்கும் மேற்பட்ட காட்டெருதுகள் உயிரிழந்திருக்கலாம் என சிக்கிம் அரசு தெரிவித்துள்ளது. மேலும் மீதமுள்ள விலங்குகளை காப்பாற்ற மருத்துவக்குழுவினரை அப்பகுதிகளுக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சிக்கிம் அரசு, கடுமையான பனிப்பொழிவு காரணமாக காட்டெருதுகள் டிசம்பர் மாதம் முதல் ஒரே இடத்தில் தங்கிவிடுகின்றன. இதனால் உணவின்றி தவித்து அவை உயிரிழந்துள்ளன என தெரிவித்துள்ளது. 

காட்டெருதுகளின் உயிரிழப்பு குறித்து பேசிய வடக்கு சிக்கிம்மின் மாவட்ட ஆட்சியர், ''கேங்டாக்கில் இருந்து வாகனத்தில் செல்ல 4 முதல் 5 மணி நேரம் வரை ஆகிறது. கடைசி மூன்று மாதங்கள் கடுமையான பனிப்பொழிவால் சாலைகளும் துண்டிக்கப்பட்டன. ஹெலிகாப்டர் உதவியுடன் காட்டெருதுகளுக்கு உணவளிக்க ஏற்பாடு செய்தோம். 

ஆனால் மோசமான வானிலையால் ஹெலிகாப்டரையும் இயக்க முடியவில்லை. வழக்கமாக பனிக்காலங்களில் வருடத்துக்கு 10 முதல் 15 காட்டெருதுகள் வரை உயிரிழக்கும். ஆனால் இந்த வருடம் உயிரிழப்பு அதிகரித்துள்ளது. மீதமிருக்கும் காட்டெருதுகளை காக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close