[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடகா: இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரிய வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் பரவலாக 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சூரியனை ஆய்வு செய்ய அடுத்த ஆண்டு ஆதித்யா விண்கலம் அனுப்பப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது

ராகுல் காந்தி குடியுரிமை விவகாரம்: மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!

supreme-court-dismisses-plea-over-rahul-gandhi-s-british-citizenship-row

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது, பிரிட்டன் குடியுரிமை தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. 

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இந்தியா மட்டுமின்றி பிரிட்டிஷ் குடியுரிமை பெற்று ஒரு நிறுவனத்தின் இயக்குநராக, பதவி வகித்து வருகிறார் என்று சுப்பிரமணியன் சுவாமி புகார் தெரிவித்திருந்தார். இந்தப் புகாரை அவர் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கும் கடந்த 2017ஆம் ஆண்டு அளித்தார். அந்தப் புகார் குறித்து 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கும்படி ராகுல் காந்திக்கு உள்துறை அமைச்சகம் கடந்த மாதம் 30ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியது.

இந்நிலையில் குடியுரிமை பிரச்னையால் அவர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.  வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், வழக்குக்கான முகாந்திரம் ஏதும் இல்லை என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்தது. அதோடு, வழக்கு விசாரணையின் போது, இதற்கான ஆவணம் எங்கே என்று கேட்ட நீதிமன்றத்திடம், இங்கிலாந்தில் ஒரு நிறுவனத்தில் பங்குதாரராக இருக்கும் ஆவணங்கள் இருப்பதாக மனுதாரர் தெரிவித்தார். 

அப்போது, ’ஏதோ ஒரு காகிதத்தில் ஒருவரின் பெயர் இருப்பதால் அவர் அந்நாட்டின் குடியுரிமை பெற்றவராக ஆகிவிடுவாரா? இவ்வளவு அரசு அமைப்புகள் இருந்தும் அவரது குடியுரிமையை கவனிக்காமல் விட்டுவிடுவார்களா? என்றும் கேள்வி எழுப்பி, மனுவைத் தள்ளுபடி செய்தது.

ஏற்கெனவே 2015ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் ராகுலின் குடியுரிமை குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் எனப் பொதுநல வழக்கு தொடரப் பட்டது. அந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட ஆதரங்களில் உண்மை தன்மையில்லை எனக் கூறி உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ததிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close