[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சமூக நீதியை நிலைநாட்டுவதில் அதிமுக அரசு தோற்றுவிட்டது: திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்
  • BREAKING-NEWS முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவைக் கூட்டம்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடக்கம்: ஒத்துழைப்பு அளிக்க அனைத்துக் கட்சிகளுக்கு அரசு வேண்டுகோள்
  • BREAKING-NEWS குன்னூரில் பலத்த மழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு: மக்கள் தவிப்பு

முஸாஃபர் நகர் கலவர வழக்கு : குற்றவாளிகள் ஆஜராக நீதிமன்றம் செக்..!

muzaffarnagar-riots-court-orders-to-attach-property-of-six-accused

முஸாஃபர் நகர் கலவர வழக்கில் குற்றாவளிகள் ஆஜராகவில்லை என்றால், அவர்களின் சொத்தக்களை சேர்த்து தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் உள்ள முஸாஃபர் நகரில் கடந்த 2013ஆம் ஆண்டு இரு மதத்தினரிடையே நடந்த கலவரத்தில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் அந்தப் பகுதியைவிட்டு வெளியேறினர். இந்த விவகாரம் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியாக அமைந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் நடைபெற்றது. இந்தக் கலவரத்தில் ஷாநவாஸ் என்ற இளைஞர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டது தொடர்பாக வழக்கு விசாரணை நடைபெற்றது.

இந்த வழக்கில் ரவிந்தர், பிரெலாத், பிஷன் சிங், டெண்டு, ஜிதேந்தர் மற்றும் தேவேந்தர் ஆகியோர் குற்றவாளிகள் எனக் கண்டுபிடிக்கப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பான விசாரனை நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், குற்றவாளிகள்  நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனால் ஆத்திரமடைந்த நீதிபதி ராகேஷ் கவுதம், அவர்கள் மீண்டும் ஆஜராகாவிட்டால் அவர்களின் சொத்தக்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டார். அத்துடன் இதுதொடர்ந்தால் அவர்களை கைது செய்ய வாராண்ட் பிறப்பிக்கப்படும் என்று எச்சரித்தார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close