[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுக எம்.பி.க்கள் இந்தி படித்துவிட்டு தமிழ் வாழ்க என கூறி மக்களவையில் பதவியேற்றுள்ளனர்; எங்களுக்கு அவ்வாறு நடிக்க தெரியாது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS குடிநீர் பிரச்னைகள் இருக்கும் அனைத்து இடங்களிலும் லாரி மூலம் தேவையான அளவு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதால், எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த அனுமதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஆவடி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜஸ்தானை சேர்ந்த எம்.பி. ஓம் பிர்லா, மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்
  • BREAKING-NEWS பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்
  • BREAKING-NEWS சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது

“மோடிக்கு எதிராக கோஷங்களை எழுப்பாதீர்கள் என குழந்தைகளிடம் கூறினேன்” - பிரியங்கா காந்தி விளக்கம்

stopped-children-from-raising-wrong-slogans-priyanka-gandhi

பிரதமருக்கு எதிராக தவறான கோஷங்களை எழுப்ப வேண்டாம் என்று குழந்தைகளிடம் கூறியதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்‌கா காந்தி விளக்கம் அளித்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் வரும் 6ஆம் தேதி அமேதி மற்றும் ரேபரேலி உள்ளிட்ட தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது. தன்னுடைய சகோதரர் ராகுல் காந்தி மற்றும் தாய் சோனியா காந்திக்கு ஆதரவாக இந்த தொகுதிகளில் பிரியங்கா காந்தி பரப்புரை மேற்கொண்டு வருகிறார். 

அதன்படி, பிரியங்கா பிரச்சாரத்தின்போது அவர் முன்னிலையில் பள்ளி குழந்தைகள் பிரதமர் மோடி குறித்து அவதூறாக கோஷம் எழுப்பியதாக குற்றஞ்சாட்டப்பட்டது. மேலும் இதுகுறித்த வீடியோவும் வலைத்தளங்களில் வைரலானதால் இதுகுறித்து தேசிய குழந்தைகள் பாதுகாப்பு உரிமை ஆணையம், பிரியங்கா காந்திக்கு விளக்கம் கேட்டு நேற்று நோட்டீஸ் அனுப்பியது. பாஜகவினரும் பிரியங்கா காந்தியை கடுமையாக விமர்சித்தனர். 

இந்நிலையில் பிரியங்கா காந்தி விளக்கம் அளித்துள்ளார். அதில், “குழந்தைகள் அப்பகுதியில் தங்களுக்குள்ளே விளையாடிக் கொண்டிருந்தனர். நான் அவர்களை பார்த்ததும் அவர்கள் சில கோஷங்களை எழுப்பினர். அவர்கள் சில தவறான கோஷங்களை எழுப்பினர். நான் உடனே அவர்களை தடுத்து நிறுத்தி நல்ல கோஷங்களை எழுப்புங்கள் என கூறினேன்.

பாஜகவில் அந்த வீடியோவை எடிட் செய்துள்ளனர். குழந்தைகளிடம் பிரதமர் பற்றிய அவர்களின் கோஷங்களை நிறுத்துமாறு நான் பேசியதை நீக்கிவிட்டனர். அவர்கள் உண்மையை திரித்து கூறிவிட்டனர். ஆனால், நான் உண்மையை கூறினேன். மேலும், நான் ஒரு தாய். எப்படி குழந்தைகளுக்கு தவறான மதிப்பீடுகளை சொல்லித் தருவேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close