[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு
  • BREAKING-NEWS திரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
  • BREAKING-NEWS இன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு
  • BREAKING-NEWS நெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்
  • BREAKING-NEWS கார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி!
  • BREAKING-NEWS இரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது

“மடியில் கனம் இருப்பதால்தான் காவலாளி; களவாணியாக தெரிகிறார் ” - தமிழிசை 

tamilisai-reply-to-stalin-speech-about-kalavani-modi

மடியில் கணமிருப்பதால்தானே காவலாளி, களவாணியாக உங்கள் கண்களுக்கு தெரிகிறார் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தூத்துக்குடியில் தொமுச-வின் மே தின பேரணி இன்று நடைபெற்றது. மே தின பேரணியில் திமுக தலைவர் ஸ்டாலின் சிவப்புச்சட்டை அணிந்து பங்கேற்றார். அதே பேரணியில் தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி உள்ளிட்டோரும் சிவப்பு நிற ஆடை அணிந்திருந்தனர். ஊர்வலமாகச் சென்ற ஸ்டாலின் மே தின நினைவு சின்னத்தில் மரியாதை செலுத்தினார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், நாட்டின் காவலாளி என பிரதமர் மோடி கூறிக்கொண்டாலும், திமுகவே உண்மையான காவலாளியாக செயல்படுவதாக தெரிவித்தார். தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்தால்தான் உரிமைகள் வந்து சேரும் எனவும் தொழிலாளர்களை பாதுகாக்கும் உண்மையான காவலாளி திமுக எனவும் குறிப்பிட்டார். மேலும், பிரதமர் மோடி நாட்டின் காவலாளி அல்ல. நாட்டின் களவாணியாக விளங்கி கொண்டிருக்கிறார் எனவும் தெரிவித்தார்.

இந்நிலையில், நாட்டின் பிரதமரை களவாணி என தரம்தாழ்ந்து விமர்சிக்கும் ஸ்டாலினை கண்டிக்கிறோம் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் “நாட்டின் பிரதமரை களவாணி என தரம்தாழ்ந்து விமர்சிக்கும் ஸ்டாலினை கண்டிக்கிறோம். ஆட்சி அதிகாரத்தில் ஊழலையும் லஞ்சத்தையும் இரண்டறக்கலந்த விஞ்ஞானபூர்வ ஊழல் களவாணிகள் இத்தகைய விமர்சனம் செய்வதை மக்கள் ஏற்கமட்டார்கள். மடியில் கனமிருப்பதால்தானே காவலாளி, களவாணியாக உங்கள் கண்களுக்கு தெரிகிறார்?” எனத் தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close