[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

தலைமை நீதிபதி விவகாரம்: ஏ.கே.பட்நாயக் குழுவை நியமித்தது உச்சநீதிமன்றம்

justice-retired-ak-patnaik-appointed-to-head-to-probe-utsav-bains-allegations

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீதான பாலியல் புகாரில், நீதிபதியை சிக்க வைக்க சதி உள்ளதா என்பதை உச்சநீதிமன்ற முன்னாள்  நீதிபதி ஜே.பட்நாயக் குழு விசாரிக்கும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய். உச்சநீதிமன்றத்தில் பணியாற்றிய 35 வயது பெண் ஒருவர், சமீபத்தில் இவர் மீது கூறிய பாலியல் புகார் பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் கடந்த 2018-ஆம் ஆண்டு அக்டோபர் 10 மற்றும் 11-ஆம் தேதிகளில், தலைமை நீதிபதி அவரது வீட்டில் வைத்து தன்னை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் குற்றம் சாட்டி யிருந்தார்.

இந்த விவகாரத்தில் பேசிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், அடுத்த வாரத்தில் சில முக்கிய வழக்குகளை கையாள இருப்பதாகவும், அதனை தடுக்கும் முயற்சியாக இந்தப் புகாரை பார்ப்பதாகத் தெரிவித்திருந்தார். அத்துடன் நீதித் துறை கடுமையான அச்சுறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளது எனவும் இதே நிலை தொடர்ந்தால் நேர்மையானவர்கள் நீதித் துறைக்கு வேலைக்கு வரத் தயங்குவார்கள் எனவும் கூறியிருந்தார். இதனிடையே இந்த விஷயத்தில் நீதிபதி ரஞ்சன் கோ காய்க்கு மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியும் ஆதரவு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராக, பொய் வழக்கு ஜோடிக்க தனக்கு 1.5 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாக உச்சநீதிமன்ற வழக்கறிஞர் உஸ்தவ் பெய்ன்ஸ் தெரிவித்தார். இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் அவர் பிரமாணப் பத்திரமும் தாக்கல் செய்தார். அதில், அஜய் என்பவர் தலைமை நீதிபதிக்கு எதிராக வழக்கு ஜோடிக்க, தன்னை அணுகியதாகக் கூறியுள்ளார். அத்துடன் ரஞ்சன் கோகாய்க்கு எதிராக புகார் கூற, பிரஸ் கிளப் ஆஃப் இந்தியாவில் செய்தியாளர்கள் சந்திப்பு நடத்த ஏற்பாடு செய்ய வலியுறுத்தியதாகவும் கூறியுள்ளார். ஆனால் அதனை ஏற்க, தான் மறுத்துவிட்டதாக உஸ்தவ் பெய்ன்ஸ் கூறியுள்ளார்.

புகார் கூறிய பெண்ணுக்கு நீங்கள் என்ன உறவு வேண்டும் என கேட்டதற்கு, அதனை தட்டிக்கழிக்கும் வகையில் அவர் பதில் கூறியதாக உஸ்தவ் தெரிவித்துள்ளார். ரஞ்சன் கோகாயை அப்பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வைக்க பல்வேறு சதித்திட்டம் நடப்பதாகவும் உஸ்தவ் பென்ஸ் தெரிவித்தார். நீதித்துறையின் சுதந்திரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் சதித்திட்டம் நடைபெறுவது குறித்து நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் தனது மனுவில் வலியுறுத்தி யுள்ளார்.

இந்நிலையில் இந்த வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, பாலியல் புகாரில் தலைமை நீதிபதியை சிக்க வைக்க சதி உள்ளதா என்பதை முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஜே.பட்நாயக் குழு விசாரிக்கும் என்று உத்தரவிட்டது. மேலும் இந்த குழுவின் விசாரணைக்கு சிபிஐ, உளவுத்துறை, டெல்லி காவல்துறை உதவ வேண்டும் என்றும் உத்தரவிட்டது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close