[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஒரே சமயத்தில் மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடத்துவது குறித்து மீண்டும் ஆலோசனை நடத்த மோடி அரசு முடிவு
  • BREAKING-NEWS மீன்பிடி தடைக்கால நிவாரண தொகையாக மீனவர் குடும்பம் ஒன்றுக்கு ரூ.5000 வழங்கப்படும்- தமிழக அரசு
  • BREAKING-NEWS நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக மக்களின் உணர்வுகளை முதல்வர் பழனிசாமி எதிரொலிக்கவில்லை- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS பொறியியல் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 20ம் தேதி வெளியிடப்படும்- அமைச்சர் கே.பி.அன்பழகன்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 72.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 67.52 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பை முதன்மையாக நிறைவேற்ற பிரதமர் மற்றும் நீர்வள அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS தமிழகத்தின் ஒப்புதலின்றி மேகதாதுதுவில் அணை கட்ட அனுமதி வழங்க கூடாது என கோரிக்கை விடுத்துள்ளோம் - முதல்வர் பழனிசாமி

வெடிகுண்டை விட மிக வலிமையானது வாக்காளர் அட்டை: பிரதமர் மோடி

the-weapon-of-terrorism-is-ied-the-strength-of-democracy-is-voter-id-pm-modi

வெடிகுண்டை விட மிக வலிமையானது வாக்காளர் அடையாள அட்டை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்,‌ இதுவரை 2 கட்டங்களாக 186 தொகுதிகளில் வாக்குப்ப‌திவு நடைபெற்றுள்ளது. 3-ஆவது கட்டமாக 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்‌ள 116 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மக்களவை தேர்தலுக்கான தனது வாக்கினை பிரதமர் மோடி இன்று பதிவு செய்தார். அகமதாபாத்தில் உள்ள ராணிப் வாக்குச்சாவடியில் பிரதமர் மோடி தனது வாக்கினை பதிவு செய்து, ஜனநாயக கடமையை ஆற்றினார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, “ வாக்களித்தன் மூலம் ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளேன். அத்துடன் என சொந்த ஊரான குஜராத்தில் வாக்களித்ததால் நான் அதிர்ஷ்டசாலி. கும்பமேளாவில் புனித நீராடினால் தூய்மை அடைவதை போல, வாக்களிப்பதன் மூலம் வாக்காளர்கள் அதனை உணரலாம். பயங்கரவாதத்தின் ஆயுதம் வெடிகுண்டு என்பதைபோல, ஜனநாயகத்திற்கு வலிமை சேர்ப்பது வாக்காளர் அடையாள அட்டை. எனவே வெடிகுண்டை விட மிக வலிமையானது வாக்காளர் அடையாள அட்டை. இதனால் அதன் வலிமையை உணர்ந்து நாம் வாக்களிக்க வேண்டும்” என தெரிவித்தார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close