[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கனமழை காரணமாக தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
  • BREAKING-NEWS நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு
  • BREAKING-NEWS கோயம்புத்தூர் - பொள்ளாச்சி உள்ளிட்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம்
  • BREAKING-NEWS இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு

சிவசேனாவில் சேருகிறார் பிரியங்கா சதுர்வேதி!

priyanka-chaturvedi-will-join-shiv-sena-today

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியுள்ள, செய்தி தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி, சிவசேனா கட்சியில் இன்று இணைகிறார். 

காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளராக இருந்தவர் பிரியங்கா சதுர்வேதி. மும்பையை சேர்ந்த இவர், அந்தக் கட்சியில் இருந்து விலகுவதாக திடீரென்று அறிவித்துள்ளார். இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் கே.சி.வேணுகோபாலுக்கு ராஜினாமா கடிதம் அனுப்பியுள்ளார்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகும் பிரியங்கா சதுர்வேதி, சிவசேனா கட்சியில் இணைவார் என்று கூறப்பட்டது. இதை சிவசேனா கட்சியின் எம்.பி, சஞ்சய் ராவத்தும் உறுதிப்படுத்தியுள்ளார். பிரியங்கா, சிவசேனா கட்சியில் இன்று இணைகிறார் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close