[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு
  • BREAKING-NEWS தனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS ஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS அதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்

நீட் தேர்வு: நாளை முதல் ஹால் டிக்கெட்!

nta-to-release-neet-2019-admit-card-on-april-15

நாடு முழுவதும் மே 5 ஆம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை நாளை முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதுமுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான நீட் பொது நுழைவுத் தேர்வு வரும் மே மாதம் 5ஆம் தேதி நடக்கிறது. இதற்கான ஹால்டிக்கெட்டை நாளை முதல் www.nta.ac.in மற்றும் www.ntaneet.nic.in ஆகிய இணையதளங்களிலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். 

நீட் தேர்வுக்கு நாடு முழுவதிலுமிருந்து 15 லட்சத்து 19 ஆயிரம் பேரும், தமிழகத்தில் மட்டும் சுமார் 1 லட்சத்து 40 ஆயி‌ரம் பேரும் விண்ணப்பித் துள்ளனர். நாடு முழுவதும் நீட் தேர்வு 154 நகரங்களில் நடைபெறுகிறது. 

தமிழகத்தில் மட்டும் சென்னை, காஞ்சிபுரம், மதுரை, கரூர், நாகர்கோவில், நாமக்கல், சேலம், தஞ்சாவூர், திருவள்ளூர், திருச்சி உள்ளிட்ட 14 நகரங்களில் நடைபெறவுள்ளது. தமிழகத்தில்‌ ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியில் நீட் தேர்வு நடைபெறுகிறது. 

நீட் தேர்வை தமிழில் எழுத விண்ணப்பித்த மா‌ணவ, மாணவிகளுக்கு தேர்வு மையங்கள் தமிழகத்திலேயே அமைக்கப்பட்டுள்ளது என தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:

[X] Close