[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை மாநகரத்தின் அரசியல் மற்றும் கலாசார வரலாற்றை பற்றி பல புத்தகங்களை எழுதிய புகழ்பெற்ற எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளரான எஸ்.முத்தையா காலமானார்
  • BREAKING-NEWS பிரதமர் மோடி பற்றி 5 பகுதிகளை கொண்ட Modi-Journey of a Common Man என்ற வெப் சீரிஸ் தொடரை நிறுத்த ஈராஸ் நவ் நிறுவனத்துக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
  • BREAKING-NEWS 4 தொகுதி சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தை மே 1ம் தேதி ஒட்டப்பிடாரத்தில்(தனி) தொடங்குகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ராகுல் காந்திக்கு ஆதரவாக கேரள மாநிலம் வயநாட்டின் மானந்தவாடி பகுதியில் இன்று பிரியங்கா காந்தி வதேரா வாக்கு சேகரிப்பு
  • BREAKING-NEWS பொன்னமராவதி சம்பவத்தால் அசம்பாவிதம் நிகழாமல் தடுக்க புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் உமா மகேஸ்வரி உத்தரவு
  • BREAKING-NEWS புதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதி உள்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் 144 தடை உத்தரவு - இருதரப்பினர் மோதலை தொடர்ந்து இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் சிவதாஸ் உத்தரவு
  • BREAKING-NEWS 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் ஏப்ரல் 21ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்பமனு பெறலாம் - அதிமுக

டி.வி விவாதத்தில் கடும் மோதல்: தண்ணீர் கிளாசை தூக்கி எறிந்த காங். செய்தி தொடர்பாளர்!

congress-spokesperson-alok-sharma-assaults-bjp-spokesperson-live-on-air

டிவி விவாதத்தில் ஏற்பட்ட மோதலால், காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் தண்ணீர் கிளாசை தூக்கி, பாஜக செய்தி தொடர்பாளர் மீது வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரங்கள் தீவிரமடைந்துள்ளன. ஒவ்வொரு கட்சியும் மற்றக் கட்சிகளை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன. இந்நிலையில் டி.வி.சேனல்களில் தீவிர அரசியல் விவாதங்கள் நடந்துவருகின்றன. இந்நிலையில் டெல்லியில் உள்ள பிரபல டிவி சேனல், விவாதம் ஒன்றுக்கு நேற்று ஏற்பாடு செய்திருந்தது. நேரலையில் ஒளிபரப்பான இதில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அலோக் சர்மா, பாஜக செய்தி தொடர்பாளர் கே.கே.சர்மா மற்றும் முன்னாள் ராணு வ வீரர்கள் இரண்டு பேர் இடம்பெற்றிருந்தனர். 

உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மோடியின் ராணுவம் என்று கூறியது குறித்து விவாதம் நடந்தது. அப்போது, பாஜக செய்தி தொடர்பாளரும் காங்கி ரஸ் செய்தி தொடர்பாளரும் ஆக்ரோஷமாக மோதிக்கொண்டனர். பின்னர் மோசமான வார்த்தைகளை பயன்படுத்த தொடங்கினார். இதையடுத்து நிகழ்ச்சித் தொகுப் பாளர், இருவரின் மைக்குகளையும் அணைத்துவிடச் சொன்னர். அப்போது, பாஜக செய்தி தொடர்பாளர் கே.கே.சர்மா, காங்கிரஸ் செய்தி தொடர்பாளரை, துரோகி என்று கூறினார். இதனால் ஆத்திரமடைந்த அவர், அங்கு வைக்கப்பட்டிருந்த தண்ணீர் கிளாசை எடுத்து கே.கே.சர்மா வீது வீசினார். அது தவறாக அருகில் இருந்தவ ரின் டேபிளின் மீது பட்டது. இதில் அவரது போன் உடைந்தது. 

நிகழ்ச்சி தொகுப்பாளரின் உடை நனைந்துவிட்டது. நல்ல வேளையாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கிளாஸ் தரையில் விழுந்து உடைந்தது. இதையடுத்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளரை இந்த செயலுக்கு மன்னிப்புக் கேட்கச் சொன்னார் நிகழ்ச்சி தொகுப்பாளர். அவர் சிறிது நேர வாக்குவாதத்துக்கு பின் மன்னிப்புக் கேட்டார். 

பின்னர் அவரை பாஜக செய்தி தொடர்பாளர் கடுமையான வார்த்தையால் ஏதோ சொன்னார். அதற்கு மன்னிப்புக் கேட்கச் சொன்னார் தொகுப்பாளர். ஆனால் அவர் கேட்கவில்லை. இதனால் வாக்குவாதம் மேலும் முற்றியது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close