[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கல்கி ஆசிரமத்துக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.20 கோடி பறிமுதல் - வருமானவரித்துறை
  • BREAKING-NEWS திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கொள்ளை வழக்கு: கொள்ளையன் முருகனை 8 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க பெங்களூரு குற்றவியல் நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS கோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தராக பி.காளிராஜை நியமித்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
  • BREAKING-NEWS இனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு

பிரச்சார போஸ்டரில் அபிநந்தன் படம் - பாஜக எம்.எல்.ஏவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

take-down-bjp-posters-with-iaf-pilot-abhinandan-s-photo-ec-to-facebook

தேர்தல் பிரச்சார போஸ்டரில் விமானப்படை வீரர் அபிநந்தன் படத்தை பயன்படுத்திய பாஜக எம்.எல்.ஏ-வுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மத்திய அரசின் பதவிக்காலம் வரும் ஜூன் 3ஆம் தேதி முடிவடையவுள்ளது. ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி மே 19ம் தேதி வரை 7 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் மார்ச் 10ம் தேதி அறிவித்தது. இதனிடையே, சமீபத்தில் தேசிய, மாநில கட்சிகளின் தலைவர்கள், பொதுச்செயலாளர்களுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் ஒன்றை அனுப்பியது. அதில், ராணுவ வீரர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் படங்களை எந்த வகையிலும் பயன்படுத்தக்கூடாது என நிர்வாகிகள், வேட்பாளர்களுக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அறிவுறுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

       

இந்நிலையில், விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் படத்தை தேர்தல் பிரச்சார போஸ்டரில் பயன்படுத்தியதாக டெல்லியைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ ஓம் பிரகாஷ் ஷர்மாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. எம்.எல்.ஏ ஓம் பிரகாஷ் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பிரச்சாரம் செய்யும் வகையில் ஒரு போஸ்டரை பதிவிட்டு இருந்தார்.

அந்த படத்தில் பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்டோர் படத்துடன் அபிநந்தன் படமும் இருந்தது. அந்த போஸ்டரில், ‘பாகிஸ்தான் பணிந்துவிட்டது. நம்முடைய வீரர் திரும்பி வந்துவிட்டார். குறுகிய நேரத்தில் அபிநந்தனை திரும்ப கொண்டு வந்தது பிரதமர் நரேந்திர மோடி ராஜதந்திரத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

         

இதனையடுத்து, அந்த படத்தை தன்னுடைய ஃபேஸ்புக்கில் இருந்து நீக்க வேண்டும் என்றும் பதிவிட்டது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் தேர்தல் ஆணையம் தன்னுடைய நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளது. பாஜக எம்.எல்.ஏ மற்றும் அதனை ஷேர் செய்த பாஜக தலைவரையும் விளக்கம் நாளைக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

         

இதனிடையே, பாஜக தலைவர்கள் பதிவிட்ட படங்களை நீக்க வேண்டும் என்று ஃபேஸ்புக்கிடம் தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலுக்கு பின்னர் எடுக்கப்பட்ட முதல் நடவடிக்கை இது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close