[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2ம் கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெறும் தமிழகம். புதுச்சேரி உள்ளிட்ட 97 மக்களவை தொகுதிகளுக்கு வேட்பு மனுத்தாக்கல் நிறைவு
  • BREAKING-NEWS டிடிவி தரப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவை மற்ற வழக்குகளுக்கு முன்மாதிரியாக கருதக்கூடாது என்ற ஆணையத்தின் கோரிக்கை நிராகரிப்பு
  • BREAKING-NEWS டிடிவி தினகரனின் அமமுகவுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
  • BREAKING-NEWS பொள்ளாச்சி கொடூரம்: புகார் அளித்த பெண்ணின் அண்ணனை தாக்கிய வழக்கில் 28ம் தேதி விசாரணைக்கு ஆஜராக பார் நாகராஜனுக்கு சிபிசிஐடி போலீஸ் சம்மன்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.67 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்

மக்களவைத் தேர்தல் அட்டவணை இன்று வெளியாக வாய்ப்பு?

ec-to-announce-lok-sabha-election-dates-soon

மக்களவைத் தேர்தலுக்கான கால அட்டவணை இன்றோ, நாளையோ வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடக்கவிருக்கிறது. அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் முழு முனைப்புடன் செய்துவருகிறது. தேர்தல் குறித்து அனைத்து கட்சிகள் மற்றும் தேர்தல் அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனையில்  ஈடுபட்டுள்ளது. இதுமட்டுமின்றி தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் அந்தந்த மாநிலங்களில் உள்ள அதிகாரிகளிடம் கேட்டறிந்து வருகிறது.

கடந்த மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு, 2014 மார்ச் 5-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இப்போது 5 நாட்கள் கூடுதலாக ஆகியுள்ள நிலையில், மக்களவைத் தேர்தல் அட்டவணையை தலைமைத் தேர்தல் ஆணையம் இன்றோ, நாளையோ வெளியிட வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. 

ஏப்ரல் மூன்றாம் வாரம் தொடங்கி மே இரண்டாம் வாரத்துக்குள் நாடு முழுவதும் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டியுள்ளது. பல்வேறு பதற்றம் நிறைந்த தொகுதிகளைக் கொண்ட மாநிலங்களில் பல கட்டங்களாக தேர்தலை நடத்த வேண்டியுள்ளது.

முதல் கட்ட வாக்குப்பதிவு நாளுக்கு முன்பாக, வேட்பு மனுத்தாக்கல், பரிசீலனை, வாபஸ் பெற கெடு என பல நாட்கள் தேவைப்படுவதுடன், கட்சிகளின் பரப்புரைக்கும் ஒரு மாதம் வரை அளிக்கப்பட வேண்டியுள்ளது. எனவே, தேர்தல் இந்த வாரத்தின் முதலிரண்டு நாட்களுக்குள் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close