[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS சென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது
  • BREAKING-NEWS தீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை

உலக பணக்காரர்கள் யார் ? - ஃபோர்ப்ஸ் பட்டியல்

forbes-magazine-has-published-the-world-s-billionaire-list-in-2019

ஃபோர்ப்ஸ் நாளிதழ் வெளியிட்டுள்ள உலக பணக்காரர்கள் பட்டியலில் ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி 13ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். 

அமெரிக்காவின் வர்த்தகப் பத்திரிகையான ஃபோர்ப்ஸ், 2019ஆம் ஆண்டிற்கான உலக பணக்காரர்கள் பட்டியலை நேற்று வெளியிட்டது. அந்த பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த 106 பணக்காரர்கள் இடம்பெற்றுள்ளனர். கடந்த 2018ஆம் ஆண்டில் உலக பணக்காரர்கள் வரிசையில் 19ஆவது இடத்தில் இருந்த ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி, தற்போது 6 இடங்கள் முன்னேறி 13ஆவது இடத்தை பிடித்துள்ளார்.

Image result for mukesh ambani

2018ஆம் ஆண்டில் 2 லட்சத்து 80 ஆயிரம் கோடியாக இருந்த அவரது சொத்து மதிப்பு நடப்பு ஆண்டில் சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் கோடியாக அதிகரித்திருப்பதாக ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது.மேலும் உலக பணக்காரர்கள் பட்டி‌யலில் 131 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்புடன் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் முதல் இடம் பிடித்துள்ளார்.

96.5 பில்லியன் சொத்து மதிப்புடன் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் 2-வது இடத்திலும் 86.5 பில்லியன் சொத்து மதிப்புடன் அமெரிக்கத் தொழிலதிபரான வாரென் பஃபெட் 3-வது இடமும் பிடித்துள்ளனர். ஆரக்கிள் நிறுவனத்தின் துணை நிறுவனர் லேரி எல்லீஸன் 7-வது இடத்திலும், ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பெர்க் 8-ஆவது இடத்திலும் உள்ளனர். உலக பணக்காரர்களில் தமிழகத்தின் ஷிவ் நாடார் மற்றும் கலாநிதி மாறன் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close