[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கோவை மாவட்டம் சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கனகராஜ் மாரடைப்பால் மரணம்
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் விசிகவின் திருமாவளவனுக்கு பானை சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS மக்கள் கணிப்பைத்தான் பார்க்க வேண்டும்; கருத்துக்கணிப்பை முழுமையாக ஏற்க முடியாது - தம்பிதுரை
  • BREAKING-NEWS லண்டன் நீதிமன்றத்தில் வைர வியாபாரி நிரவ் மோடி தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடி; இந்திய மதிப்பில் ரூ.4.50 கோடி பிணைத்தொகை செலுத்த தயாராக இருப்பதாக நிரவ் மோடி தரப்பு வாதம்
  • BREAKING-NEWS 2019 மக்களவை தேர்தலில் நான் போட்டியிடுவேனா என்பது குறித்து 24 ஆம் தேதி அறிவிக்கப்படும் - கமல்ஹாசன்
  • BREAKING-NEWS 2019 மக்களவை தேர்தலில் தான் போட்டியில்லை என மாயாவதி அறிவிப்பு
  • BREAKING-NEWS அரசியலுக்கு வாரிசுகள் வரக்கூடாது என்பது எந்த சட்டத்திலும் இல்லை- மதுரையில் ஒபிஎஸ் பேட்டி

தனது தோல்வியை மறைக்க இந்தியா-பாக் பிரச்னையை பயன்படுத்துகிறது மத்திய அரசு - மாயாவதி

pm-centre-using-ind-pak-tension-to-hide-their-failures-mayawati

புல்வாமா தாக்குதலை மையப்படுத்தி நிகழும் இந்தியா - பாகிஸ்தான் பிரச்னையை வைத்து அரசின் தோல்விகளை  பிரதமர் மோடியும் பாரதிய ஜனதா கட்சியும் மறைக்க பார்க்கின்றனர் என பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார்.

சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு மரியாதை செலுத்திய மாயாவதி, அவர்கள் குடும்பத்தினரின் துயரத்தை பகிர்ந்து கொள்ளவும், அவர்களுக்கு அனைத்து உதவிகளை வழங்கவும் தனது கட்சித் தலைவர்களை வலியுறுத்தினார்.

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பேசிய மாயாவதி, “நாட்டின் பாதுகாப்பு மற்றும் கவுரவத்தை உறுதி செய்பவர்களின் கையில் நாடு இல்லை என மக்கள் எண்ணுகின்றனர். நரேந்திர மோடியும் பாஜக தலைவர்களும் இந்தியா பாகிஸ்தான் பிரச்னையை வைத்து தங்களது திறமையற்ற செயல்களையும் தோல்விகளையும் மறைக்கின்றனர். 40 சிஆர்பிஎஃப் வீரர்களின் வீரமரணத்தை வைத்து பாஜகவினர் அரசியல் செய்கின்றனர். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் பதட்டங்களைக் குறைக்கும் விதமாகவே விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமான் நாடு திரும்பியுள்ளார். 

இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் கௌரவத்தை உறுதி செய்ய வேண்டும். எந்த நாடும் இந்தியாவை புறக்கணிப்பதற்கோ அல்லது அச்சுறுத்துவதற்கோ துணிவதில்லை. பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு நாடு கவலை அடைந்துள்ளது. அங்கு என்ன நடந்தது என்பது பற்றி பாஜக குறிப்பாக பிரதமர் மோடி மக்களிடமிருந்து மறைக்க முடியாது.” எனத் தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close