[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் வெற்றி
  • BREAKING-NEWS மகாராஷ்டிரா, ஹரியானா - பாஜக தொடர்ந்து முன்னிலை
  • BREAKING-NEWS ‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS தீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை

’ஒரே அடி, உண்மையை கக்கினான் மசூத் அசார்’’: விசாரணை அதிகாரி தகவல்!

masood-azhar-was-rattled-by-slap-from-army-man-interrogator

இந்திய ராணுவ வீரர் கொடுத்த ஒரே அடியில் பயங்கரவாத திட்டத்தின் அனைத்தையும் மசூத் அசார் ஒப்பித்தான் என அவனை விசாரித்த ஐபிஎஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலில், சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேர் வீரமரணமடைந்தனர். இந்த கொடூரத் தாக்கு தலை, பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ்- இ முகமது அமைப்பு நடத்தியுள்ளது. இதன் தலைவன் மசூத் அசார். 

இவனை, 1994 ஆண்டு இந்திய பாதுகாப்பு படையினர் காஷ்மீரில் கைது செய்தனர். பின்னர் 1999-ஆம் ஆண்டில் இந்திய விமானத்தைக் கடத்தி, அவனைப் பயங்கரவாதிகள் மீட்டனர். 180 பயணிகளை காப்பாற்ற வேண்டும் என்ற கட்டாயத்தில் மசூத் உட்பட 3 பயங்கரவாதிகளை அப் போ தைய வாஜ்பாய் அரசு விடுதலை செய்தது. இதையடுத்து பாகிஸ்தானில் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தை ஆரம்பித்து, அங்கிருந்தபடியே காஷ் மீரில் பயங்கரவாத செயல்களை தொடர்ந்து நடத்தி வருகிறான். நாடாளுமன்ற தாக்குதல், பதான்கோட் மற்றும் உரி தாக்குதல்களை செயல் படுத்தியது இவன் மூளைதான் என்கிறார்கள்.

இந்நிலையில் மசூத் அசாரை, அப்போது விசாரித்த விசாரணை அதிகாரியும் முன்னாள் சிக்கிம் மாநில டி.ஜி.யுமான அவினாஷ் மோஹனானே ஐபிஎஸ்  (Avinash Mohananey) அவனிடம் நடத்திய விசாரணை பற்றி கூறியுள்ளார்.

‘’மசூத் அசார், போலியான போர்ச்சுக்கல் பாஸ்போர்ட் மூலம் பங்களாதேஷ் வந்து, அங்கிருந்து இந்தியாவுக்குள் நுழைந்தான். காஷ்மீரின் ஆனந்த்நாக் பகுதியில் 1994 ஆம் ஆண்டு பாதுகாப்பு படையினர் அவனை கைது செய்தனர். அவனை கையாள எந்த கடினமான வேலையையும் நாங்கள் செய்யவில்லை. மிகவும் எளிதாகவே கையாண்டோம்.

இந்திய ராணுவ வீரர் கொடுத்த ஒரே அடியில், பயங்கரவாத இயக்கத்தின் அனைத்துத் திட்டங்களையும் உளறிவிட்டான். பாகிஸ்தான் ஐஎஸ்ஐ, பயங்கரவாதத்தைப் பயன்படுத்தி இந்தியாவில் எப்படி மறைமுகத் தாக்குதலை நடத்துகிறது என்பதையும் எளிதாகவே சொல்லிவிட்டான். ஆட் களை எப்படி சேர்க்கிறார்கள், பாகிஸ்தானில் என்னென்ன பயங்கரவாத இயக்கங்கள் செயல்படுகிறது, அவர்களின் வேலை என்ன என்பதை எல் லாம் தெளிவாக ஒப்பித்தான்.

அவனிடம் இருந்து உண்மையை பெற நாங்கள் கஷ்டப்படவே இல்லை. ஜம்முவின் கோட் பல்வால் சிறையில் அவனிடம் பலமுறை விசார ணை நடத்தி இருக்கிறேன். ஆனால், அவன் அடிக்கடி, ‘நான் பாகிஸ்தானுக்கும் ஐஎஸ்ஐ-க்கும் முக்கியமானவன். என் புகழை நீங்கள் குறைவாக மதிப்பிடுகிறீர்கள். நான் பாகிஸ்தானுக்கு கண்டிப்பாகத் திரும்புவேன் என்று ஐஎஸ்ஐ கூறியிருக்கிறது’ என்று சொல்வான்’’ என தெரிவித்திருக் கிறார்.
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close