[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சியாச்சினில் கண்காணிப்பு கோபுரத்தில் இருந்து தவறி விழுந்து தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் பால்பாண்டி உயிரிழப்பு
  • BREAKING-NEWS ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த தயார் - சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நூறு நாள் வேலைதிட்டத்தை 200 நாட்களாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் - அதிமுக கூட்டணியில் போட்டியிடும் புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்திற்கு ஆதரவாக முதல்வர் பழனிசாமி பரப்புரை
  • BREAKING-NEWS மணல் கடத்தலுக்கு உதவிய எத்தனை அதிகாரிகள் மீது குண்டாஸ் போடப்பட்டுள்ளது? - உயர்நீதிமன்ற கிளை
  • BREAKING-NEWS திருச்சியில் வரும் 25ல் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளேன்; தேர்தல் பரப்புரைக்காக ராகுல் காந்தி விரைவில் தமிழகம் வருவார் - திருநாவுக்கரசர்
  • BREAKING-NEWS லோக்பால் அமைப்பின் முதல் தலைவராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பினாகி சந்திரகோஷ் பதவியேற்றார்
  • BREAKING-NEWS தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் 27ம் தேதி முதல் தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார்

“வசந்தகுமார் உயிரிழந்துவிட்டார். நாங்கள் எங்கள் ஹீரோவை இழந்துவிட்டோம்”- சோகத்தில் கிராமத்தினர்..!

we-lost-a-hero-kerala-village-mourns

பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் உயிரிழந்த வசந்தகுமாரின் ஊர்க்காரர்கள், தங்கள் கிராமத்து ஹீரோவை இழந்துவிட்டதாக சோகத்துடன் தெரிவித்துள்ளனர்.

காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் இருந்து நேற்றுமுன் தினம் 78 வாகனங்களில் ‌2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட மத்திய ரிசர்வ் பாது‌காப்புப் படையினர் பயணம் செய்தனர். புல்வாமா மாவட்டத்தில் அவர்கள் வாகனம் வந்தபோது, வெடிகுண்டு நிரப்பிய சொகுசு காரை மோதவிட்டு பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தற்கொலைப்படை தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்த இரண்டு வீரர்கள் உள்பட மொத்தமாக 40 பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்கொலைப் படை தாக்குதலுக்கு உயிரிழந்தவர்களில் ஒருவர், கேரள மாநிலம் வயநாடு அருகிலுள்ள வைத்திரி கிராமத்தை சேர்ந்த வசந்தகுமார். இவரின் மரணம் குடும்பத்தினர், உறவினர்கள் மட்டுமில்லாமல் ஊர் மக்களையே சோகத்தில் உறைய வைத்துள்ளது. ஆதிவாசி சமூகத்தை சேர்ந்த வசந்தகுமார், சிஆர்பிஎஃப் வீரராக கடந்த 18 வருடங்களுக்கு முன் பணியில் சேர்ந்துள்ளார். கடந்த மாதம்தான் பஞ்சாப்பில் இருந்து வேலைநிமித்தமாக காஷ்மீருக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதனையடுத்து சொந்த ஊர் திரும்பிய வசந்தகுமார், குடும்பத்தினருடன் 10 நாட்களை கழித்துள்ளார். அதனையடுத்து கடந்த பிப்ரவரி 9-ஆம் தேதி மீண்டும் காஷ்மீர் பணிக்காக சென்றுள்ளார்.

இதுகுறித்து வசந்தகுமாரின் நண்பர்கள் கூறும்போது, “ இன்னும் இரண்டு ஆண்டுகளில் பணி ஓய்வு பெற விரும்பியிருந்தார் வசந்தகுமார். அதற்குள் இப்படி நடந்துவிட்டது. நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்துள்ள வசந்தகுமாரை நினைத்து உண்மையிலேயே பெருமைப்படுகின்றோம்.” என்றனர். இதுகுறித்து வைத்திரி கிராம பஞ்சாயத்து தலைவரான உஷாகுமாரி கூறும்போது, “ தைரியமான இதயத்தை இழந்துள்ளோம். வசந்தகுமார் நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்துள்ளார். ஆனால் ஒரேயொரு மகனை வைத்திருந்த அவரின் பெற்றோருக்கு யாரால் ஆறுதல் சொல்ல முடியும். அவரின் மனைவியை என்ன வார்த்தைகள் கூறி நாங்கள் தேற்றுவோம். அவரின் இரண்டு குழந்தைகளும் அப்பா எங்கே என கேட்டால் என்ன சொல்வது” என தெரிவித்தார்.

இதுகுறித்து வசதந்குமாரின் நண்பர் மேலும் கூறும்போது, “ வசந்தகுமார் திடகாத்திரமான உடல் கட்டமைப்பை  கொண்டவர். எல்லாவற்றிற்கும் மேலே சிறந்த கால்பந்து விளையாட்ட வீரரும் கூட. அதனால் ராணுவத்திற்கு அதிக சிரமம் இல்லாமல் தேர்வாகி விட்டார். அவரின் எண்ணம், கனவு என எல்லாமே ராணுவ உடையை அணிவதாக இருந்தது. கிராமத்து இளைஞர்கள் பலர் அவரை ரோல் மாடலாக எண்ணியுள்ளனர்.

புல்வாமா தாக்குதல் குறித்த செய்தி அறிந்ததும் மிகச் சாதாரண ஒன்றாகத் தான் இருக்கும் என முதலில் நினைத்தேன். ஆனால் தொலைக்காட்சியில் பார்த்த போதுதான் பெரிய அளவிலான தாக்குதல் என புரிந்தது. வசந்தகுமாருக்கு எதுவும் விபரீதம் நடந்திருக்கக் கூடாது என நினைத்தேன். அவருடைய வாட்ஸ் அப் நிலவரத்தை செக் செய்து பார்த்தேன். கடைசியாக 10.30 மணிக்கு பார்த்திருப்பதாக காட்டியது. எதுவும் ஆகியிருக்கக் கூடாது என பிரார்த்தனையும் செய்தேன். ஆனால் வசந்தகுமார் உயிரிழந்துவிட்டார். நாங்கள் எங்கள் ஹீரோவை இழந்துவிட்டோம்” எனத் தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close