[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
  • BREAKING-NEWS குழந்தைகளை கடத்தி வைத்த புகாரில் நித்தியானந்தா மீது கிரிமினல் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS 2021-ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக மக்கள் அதிசயம் நிகழ்த்துவார்கள்: ரஜினிகாந்த்
  • BREAKING-NEWS தமிழகத்தின் 33‌-ஆவது மாவட்டமாக இன்று உதயமாகிறது தென்காசி

பயங்கரவாத தாக்குதல்: பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு இன்று கூடுகிறது

cabinet-committee-on-security-ccs-meeting-to-be-held-today

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலை அடுத்து, பாதுகாப்புத்துறைக்காக மத்திய அமைச்சரவைக் குழு இன்று காலை கூடுகிறது.

காஷ்மீர் மாநிலத்தில், பாதுகாப்புப் படையினர் 2 ஆயிரத்து 547 பேர் ஜம்முவில் இருந்து, 78 வாகனங்களில் பள்ளத்தாக்கு பகுதிக்கு நேற்று சென்று கொண்டிருந்தனர். ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலையில் புலவாமா மாவட்டம், அவந்திப்போரா பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, தற்கொலை படை தீவிரவாதி, வெடிகுண்டு நிரப்பிய காரை துணை ராணுவ வீரர்கள் சென்ற பேருந்து ஒன்றை குறிவைத்து மோதினான்.

இதில் குண்டு வெடித்து பஸ் முற்றிலும் உருக்குலைந்தது. அந்த பஸ்சில் பயணம் செய்த வீரர்கள் அனைவரும் உடல் சிதறி விழுந்தனர். இதில் தூத்துக்குடியைச் சேர்ந்த வீரர் உட்பட 44 பேர் உயிரிழந்தனர். 20 வீரர்கள் படு காயமடைந்துள்ளனர். அவர்ர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

இந்தநிலையில், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் ஆகியோரிடம் பாதுகாப்பு குறித்து பேசினார். இதையடுத்து பாதுகாப்புத் துறைக்கான மத்திய அமைச்சரவைக் குழு, (Cabinet Committee on Security ) இன்று காலை 9.15-க்கு கூடுகிறது. இதில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close