[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாட்டின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ரூ.3.5 லட்சம் கோடி செலவிட மத்திய அரசு திட்டம் - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS திமுக போட்ட வழக்கினால் மன உளைச்சல் ஏற்பட்டுதான் ஜெயலலிதா மரணமடைந்தார் - நாங்குநேரி தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பேச்சு
  • BREAKING-NEWS ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் - வைகோ
  • BREAKING-NEWS 7 பேர் விடுதலை குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் ட்வீட்
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு

தற்கொலைக்கு முன்பு ஐஐடி மாணவன் அனுப்பிய மின்னஞ்சல்! விசாரணையில் திருப்பம்

iit-hyderabad-student-writes-mail-to-his-friends-before-suicide

ஐஐடி ஹைதராபாத் விடுதியின் ஏழாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட மாணவன் அனுப்பிய மின்னஞ்சல் போலீசாருக்கு கிடைத்துள்ளது.

ஹைதராபாத் ஐஐடி பல்கலைக்கழகத்தில் படித்த மாணவர் அனிருத்யா முமனேனி (21), கடந்த சனிக்கிழமை இரவு விடுதியின் 7-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். போனில் பேசிக்கொண்டே மாடியில் இருந்து மாணவர் அனிருத்யா தவறி விழுந்ததாக விடுதி நிர்வாகம் தெரிவித்தது. ஆனால் போலீசார் நடத்திய விசாரணையில் மாணவரின் மரணம் விபத்து அல்ல தற்கொலை என தெரியவந்தது. 

ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்திய நிலையில் மாணவர் அனிருத்யா, தன் நண்பனுக்கு அனுப்பிய மின்னஞ்சல் ஒன்று தற்போது கிடைத்துள்ளது. அந்த மின்னஞ்சலில் ''என் எதிர்காலத்தை நினைத்துப் பார்த்தால் நான் வாழ்வை முடித்துக்கொள்வது சரியானதாகவே இருக்கிறது. ஒவ்வொரு நாளும் மிகத்துயரமானதாகவே போய்க்கொண்டு இருக்கிறது'' என்று தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு மனநல மருத்துவரையும் சந்தித்து அனிருத்யா ஆலோசனை நடத்தியதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மன அழுத்தம் காரணமாகவே மாணவர் உயிரிழந்தது தெரியவந்துள்ள நிலையில், என்ன பிரச்னை காரணமாக அனிருத்யா உயிரிழந்திருப்பார் என்று போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மாணவரின் உயிரிழப்புக்கு கல்லூரி நிர்வாகம், சக மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close