[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் கடந்த சில நாட்களாக அதிகரித்து காணப்பட்ட காற்று மாசு குறைந்துள்ளது
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர்: கந்தர்பால் அருகே கண்ட்டில் நடந்த துப்பாக்கிச்சண்டையில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS சென்னையில் பிரபல வணிக வளாகத்தின் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி இளைஞர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS ஓமலூரில் உள்ள அதிமுக அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் உள்ளாட்சித் தேர்தல் குறித்து முதல்வர் பழனிசாமி ஆலோசனை
  • BREAKING-NEWS சிவசேனாவின் அரவிந்த் சாவந்த் தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததையொட்டி, அவரது கனரக தொழில், பொதுத்துறை நிறுவனங்கள் துறை பிரகாஷ் ஜவடேகருக்கு கூடுதல் பொறுப்புப்பாக அளிக்கப்பட்டுள்ளது
  • BREAKING-NEWS தமிழகத்தில் வரும் 14ஆம் தேதிமுதல் 16ஆம் தேதிவரை 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு
  • BREAKING-NEWS அயோத்தியில் ராமர் கோயில்: அறக்கட்டளை அமைக்கும் பணி தொடக்கம்

மத்திய பட்ஜெட்- சில முக்கிய அம்சங்கள்

important-announcement-of-interim-budget-2019

மத்திய பட்ஜெட்டில் விவசாயிகள், ஏழைகள், நடுத்தர மக்கள், தொழிற்துறையினர் என பல்வேறு துறையினருக்கும் முக்கிய அறிவிப்புகளும்,சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டின் மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மத்திய இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் பொறுப்பு வகிக்கும் பியுஷ் கோயல் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் முக்கிய எதிர்பார்ப்பாக கருதப்பட்ட ஒரு விஷயம் மாத சம்பளம் பெறுவோரின் தனிநபர் வருமான வரி உச்சவரம்பு உயர்த்தப்படும் என்பதுதான். இந்நிலையில் தனிநபர் வருமானம் ரூ.5 லட்சம் வரை இருக்கும் பட்சத்தில் வரி செலுத்த வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர வருமானத்தில் நிரந்தர கழிவு வரம்பு 40 ஆயிரம் ரூபாயில் இருந்து 50 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து சில வருமான வரி சலுகைகள் அறிவித்த நிதியமைச்சர் அதன் மூலம் ஆண்டுக்கு 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை வருவாய் உள்ளவர்கள் வரி செலுத்த தேவையில்லாத நிலை ஏற்படும் எனத் தெரிவித்தார்.5 ஏக்கருக்கு கீழ் நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் செலுத்தப்படும் என்றும் இத்திட்டம் கடந்த ஆண்டு டிசம்பர் 1ம் தேதியிட்டு தொடங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். இத்திட்டத்தின் கீழ் முதல் தவணையான 2 ஆயிரம் ரூபாய் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ‌விரைவில் சேர்க்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அன்றாட வருமானத்தை சார்ந்திருக்கும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ஒய்வூதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 15 ஆயிரத்திற்கு கீழ் ஊதியம் பெறும் தொழிலாளர்கள் மாதம் ‌100 ரூபாய் செலுத்தினால் 60 வயதிற்கு பிறகு மாதம்தோறும் 3 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியமாக பெறுவர். 

Image result for budget

மேலும் பிஎஃப் சந்தாதாரர் உயிரிழந்தால் வழங்கப்படும் நிவாரண உதவி 6 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படுகிறது. அங்கன்வாடி பணியாளர்களுக்கு மதிப்பூதியம் 5‌ சதவிகிதம் அளவுக்கு உயர்த்தப்படுகிறது. நாட்டில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஒரு லட்சம் கிராமங்கள் டிஜிட்டல் மயமாக்கப்படும் என்றும் மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர மேலும் பல அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் வெளியாகியுள்ளது.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close