[X] Close
JUST IN
  • BREAKING-NEWS விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ.28,824க்கு விற்பனை
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்
  • BREAKING-NEWS அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்பு. 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - ‌வானிலை மையம்

திட்டத்திற்கு முக்கியத்துவமில்லை, விளம்பரத்திற்கே அதிக செலவு !

rather-than-project-its-publicity-gains-importance

மத்திய அரசின்  “பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளை படிக்க வைப்போம்" திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் 56 சதவிகிதம் இதன் விளம்பரத்திற்கே பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

பெண்கள் முன்னேற்றத்திற்காக மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட திட்டம் தான் “பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளை படிக்க வைப்போம்" இந்தத் திட்டம் கடந்த 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் பெண்கள் பாலின விகிதத்தை அதிகரிப்பது மற்றும் சமூகத்தில் பெண் குழந்தைகள் பற்றிய எண்ணங்களை மாற்றுவதாகும். இந்தத் திட்டத்தை மத்திய அரசின் மூன்று அமைச்சகங்கள் ஒன்றிணைந்து அமல்படுத்துகின்றன.

இந்தத் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் 25 சதவிதம் தான் இதுவரை மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது. அதேபோல, திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட 19 சதவித நிதி இதுவரை மத்திய அரசால் வெளியிடப்படவில்லை. மேலும் இந்தத் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட 56% நிதி இந்தத் திட்டத்தின் விளம்பரத்திற்காக மீடியாக்களில் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவல்கள் அனைத்தும் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் வளர்ப்புத் துறையின் இணையமைச்சர் வீரேந்திர குமார் மக்களவையில் தாக்கல் செய்த பதிலில் தெரியவந்துள்ளது. 

இந்தத் திட்டம் முதல் கட்டமாக 100 மாவட்டங்களில் அமல்படுத்தப்பட்டது. அதன்பின் இரண்டாவது கட்டமாக 61 மாவட்டங்கள் சேர்க்கப்பட்டது. தற்போது இந்தியாவில் உள்ள 640 மாவட்டங்களிலும் அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்ட 161 மாவட்டங்களில் 53 மாவட்டங்களில் பெண் பாலின விகிதம் 2015 ஆண்டிலிருந்து குறைந்திருப்பதாக அரசின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து பொருளாதார வல்லுநர் மிதாலி நிகோர், “இந்த திட்டத்தில் மிகவும் குறைந்த நிதியே பெண் குழந்தையின் படிப்பு மற்றும் சுகாதாரத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தத் திட்டம் விளம்பரத்திற்கே அதிக முக்கியத்துவம் தருகிறது” என்றார்.  

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close