[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலுக்காக முதல்வர் மீது பொய் பரப்புரை செய்தால் மக்கள் பாடம் புகட்டுவர்; அரசியல் காழ்ப்புணர்வால் கோடநாடு விவகாரத்தில் பொய் புகார் பரப்பப்படுகிறது - அமைச்சர் தங்கமணி
  • BREAKING-NEWS கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் ஆளுனரிடம் ஸ்டாலின் குற்றம்சாட்டியது அரசியல் ஆதாயத்துக்காகத்தான் - கே.பி.முனுசாமி
  • BREAKING-NEWS 2 சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆதரவை வாபஸ் பெற்றதால் என்ன?; என் வலிமை எனக்கு தெரியும் - கர்நாடக முதல்வர் குமாரசாமி
  • BREAKING-NEWS சென்னை கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலாலுடன் கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன், அதிமுக எம்.பி.க்கள் ஜெயவர்தன், வைத்திலிங்கம் சந்திப்பு
  • BREAKING-NEWS கர்நாடக அரசுக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக 2 சுயேச்சை எம்எல்ஏக்கள் அறிவிப்பு
  • BREAKING-NEWS கேரள மாநிலம் சபரிமலை பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தெரிந்தது; ஐயப்ப பக்தர்கள் ஏராளமானோர் தரிசனம் செய்தனர்
  • BREAKING-NEWS கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் முதல்வரை தொடர்புபடுத்தி குற்றஞ்சாட்டியுள்ளார்கள்; எஞ்சியுள்ள தடயங்களை அழிக்க முயற்சி நடைபெற்று வருகிறது - மு.க.ஸ்டாலின்

மேகாலயா சுரங்க விபத்து: ஏதாவது அதிசயம் நடக்காதா?

meghalaya-mine-tragedy-no-breakthrough-in-rescue-opetations

மேகாலயா சுரங்க விபத்தில் ஏதாவது அதிசயத்தைதான் நம்ப வேண்டி இருக்கிறது என்று மத்திய அரசின் சொலிசிடர் ஜெனரல் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

மேகாலயாவில் கிழக்கு ஜைன்டியா மாவட்டத்தில் ஏராளமான சுரங்கங்கள் உள்ளன. கைவிடப்பட்ட சில சட்ட விரோத சுரங்கங்களும் இங்கு செயல்பட்டு வருகின்றன. இந்த மாவட்டத்தில் உள்ள சான் கிராமத்தில், கைவிடப்பட்ட சுரங்கம் ஒன்று சட்டவிரோதமாக செயல்பட்டு வந்தது. ’எலி வளை’ சுரங்கம் என்று சொல்லப்படுகிற இந்தச் சுரங்கத்துக்குள் மழை காரணமாக, அருகில் உள்ள லைத்தின் ஆற்றில் இருந்து கடந்த மாதம் 13 ஆம் தேதி தண்ணீர் புகுந்தது. இதனால் சுரங்கத்தில் வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளர்களில் 15 பேர், அதற்குள் சிக்கினர். அதில் 2 பேர் வெளியேறிவிட்டனர். 13 பேர் மாட்டிக்கொண்டனர்.

இதையடுத்து தேசிய பேரிடர் மீட்புப்படை, தீயணைப்பு படை, கடற்படை வீரர்கள் முகாமிட்டு அவர்களை மீட்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். தண்ணீரை வெளியேற்ற முடியாமல் மீட்பு படையினர் தவித்து வருகின்றனர். ஒரு மாதம் ஆகியும் அவர்களின் நிலை என்னவா னது என்று தெரியவில்லை. தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்துவருகிறது. தண்ணீரை வெளியேற்றும் பணியில் சக்தி வாய்ந்த மோட்டார் பம்புகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த புதன்கிழமை மாலை வரை, 28 லட்சம் லிட்டர் தண்ணீரை வெளியேற்றியுள்ளனர். இருந்தாலும் சுரங்க த்துக்குள் தண்ணீர் அளவு குறையவில்லை. 

இதுபற்றி இந்த மீட்புக் குழுவின் செய்தி தொடர்பாளர் ஆர்.சுசுங்கி கூறும்போது, ‘’கடற்படையினர் தண்ணீருக்குள் மூழ்கி, ஆறு சுரங்கத்துக்குள் தேடுதலை நடத்தினர். அதில் முன்னேற்றமில்லை. தொடர்ந்து முயன்று வருகிறோம்’’ என்றார்.

இதற்கிடையே, சுரங்கத்தில் சிக்கியோரை மீட்கும் பணிகளை விரைவுபடுத்தக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொது நல வழக்கின் விசாரணை, நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அப்துல் நஸீர் முன்பு நேற்று வந்தது. 'இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றிய அறிக்கை யை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்' என, மாநில அரசுக்கு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. அதன்படி நேற்று அறிக்கை தாக்கல் செய்யப் பட்டது.

அதில், ’’சுரங்கம் பயங்கர ஆழத்தில் இருக்கிறது. கருநிறத்தில் தண்ணீர் இருப்பதால் உள்ளே செல்வது கஷ்டமாக இருக்கிறது. 150 அடிக்கு தண்ணீர் இருக்கிறது. பல லட்சம் லிட்டர் தண்ணீரை வெளியேற்றினாலும் ஆற்று நீர் உள்ளே வருவதால் தண்ணீர் அளவு குறைய வில்லை. கடற்படை வீரர்களால் 90 அடி ஆழம் வரை மட்டுமே செல்ல முடியும் என்பதால் மீட்பு பணியில் சிக்கல் எழுந்திருக்கிறது’’ என்று கூறப்பட்டி ருந்தது.

மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ''சுரங்கத்தில் சிக்கியோரை மீட்க, அனைத்து நடவடிக்கைகளும் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. இருந்தும் பயனில்லை. இந்த விவகாரத்தில் ஏதாவது அதிசயம் நடக்காதா என்று நம்புகிறோம்’’ என்றார்

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மீட்பு பணிகளை துரிதப்படுத்துமாறு கேட்டுக்கொண்டனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close