[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பரபரப்பான அரசியல் சூழலில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது; காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு பாஜக பேரம் பேசுவதாக கூறப்படும் நிலையில் ஆலோசனை நடைபெறவுள்ளது
  • BREAKING-NEWS காணும் பொங்கலையொட்டி சென்னையில் நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்; சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத்தளங்களுக்கு 480 சிறப்பு பேருந்துகள் இயக்கம் - மாநகர போக்குவரத்துக்கழகம்
  • BREAKING-NEWS சேலம்-ஓமலூர் பிரதான சாலைக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டினார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS அதிமுக அரசு நீடிக்க வேண்டும் என்று திமுக எம்எல்ஏக்களே விரும்புகின்றனர் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS சேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபத்தை திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS திருவாரூர் நாகை மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்த அனுமதி அளித்த மத்திய அரசை கண்டித்து நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோமல் கிராமத்தில் கறுப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டதாக 30பேர் மீது திருவாரூர் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மூடுபனி அதிகமாக நிலவும்; தமிழகத்தில் மேகக்கூட்டங்கள் குறைவால் பனி அதிகரித்து காணப்படுகிறது - சென்னை வானிலை ஆய்வு மையம்

சபரிமலையில் சாமி தரிசனம் செய்தது பக்தைகள்தானா ? கேரள அரசுக்கு நீதிமன்றம் சரமாரிக் கேள்வி

the-kerala-high-court-observed-that-the-state-government-should-be-able-to-identify-those-with-a-hidden-agenda

சபரிமலை ஐயப்பன் கோவில் பக்தர்களுக்கானது. கோவிலின் அமைதி கெட்டுப்போக வேண்டும் என நினைக்கின்றவர்களை மாநில அரசு கண்டுபிடிக்க வேண்டும் என்று கேரள உயர்நீதிமன்றம் அதிரடியாக தெரிவித்துள்ளது. மேலும் சபரிமலை ஐயப்பன் கோவிலில் நுழைந்த பிந்து மற்றும் கனக துர்கா உண்மையான பக்தர்கள்தானா, அவர்களின் நோக்கங்களையும் கேரள அரசு ஆராய வேண்டும் என்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

கேரள மாநிலம் சபரிமலை சுவாமி ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் செப்டம்பர் 28 ஆம் தேதி தீர்ப்பளித்தது. இதனையடுத்து உடனடியாக அந்தத் தீர்ப்பை அமல்படுத்த கேரளாவை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவெடுத்தது. மிகவும் பரபரப்பான சூழ்நிலையில் மாதாந்திர பூஜைக்காக ஐயப்பன் கோவிலின் நடை ஐப்பசி மாதம் திறக்கப்பட்டது. ரெஹானா பாத்திமா முதல் ஸ்வீட்டி மேரி வரை ஐயப்பன் கோவில் சன்னிதானம் செல்ல முயன்றனர். ஆனால் பக்தர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக தங்களது முயற்சியை கைவிட்டனர். மேலும் நிலக்கல் உள்ளிட்ட பகுதிகளில் தடியடி சம்பவமும் நடைபெற்றது. இதனால் சபரிமலை ஐயப்பன் கோவிலின் பல முக்கிய இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பின்பு, மண்டலப் பூஜை நிறைவடைந்து நவம்பர் 27 ஆம் தேதி சபரிமலை கோயில் நடை அடைக்கப்பட்டது. அதனையடுத்து மகர விளக்குப் பூஜைக்காக டிசம்பர் 30 ஆம் தேதி கோவில் நடை திறக்கப்பட்டது. இப்பூஜைக்காக கோயிலின் நடை ஜனவரி 19 ஆம் தேதி வரை மட்டுமே திறந்திருக்கும் என்பதால் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரம் மாநிலங்களில் இருந்து சபரிமலைக்கு பக்தர்கள் படையெடுக்க தொடங்கினார்கள். இப்படியாக ஜனவரி 2 ஆம் தேதி காலை கேரள அரசு ஒரு வீடியோவை வெளியிட்டு, அதில் பிந்து மற்றும் கனக துர்கா எனும் 40 வயதுடைய பெண்கள் அதிகாலை சாமி தரிசனம் செய்ததாக தெரிவித்தது. இவ்விவகாரம் நாடு முழுவதும் வேகமாக பரவத் தொடங்கியது. கேரளாவில் பாஜக மற்றும் இந்து அமைப்புகள் முழு அடைப்புக்கு அழைப்புவிடுத்தது. இதனால் கேரள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. 

சபரிமலை தொடர்பான வழக்கை கேரள உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கின் விசாரணையை நீதிபதிகள் பி.ஆர்.ராமசந்திர மேன்ன், என்.அனில் குமார் அமர்வு விசாரித்து வருகிறது. இவர்கள் அரசுத் தரப்பு வழக்கறிஞர்களுக்கு பல கேள்விகளை முன் வைத்தனர் அதில் "உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவதற்கு மாநில அரசு சிரமங்களை சந்தித்து வருகிறது. சபரிமலை கோவில் பக்தர்கள் நிம்மதியாக வந்துச் செல்ல வேண்டிய இடம். ஒருபோதும் அதன் தன்மை பாதிக்கக் கூடாது. பிந்து - கனகதுர்கா ஆகியப் பெண்கள் சபரிமலையில் சாமி தரிசனம் செய்தது குறித்து ஏதாவது மறைமுக திட்டம் இருக்கிறதா ? அவர்கள் இருவரையும் வேறு யாரேனும் இயக்குகிறார்களா என்பதை மாநில அரசு விசாரிக்க வேண்டும்" என தெரிவித்தனர்.

Image result for kerala high court

இது குறித்து மேலும் பல கருத்துகளை தெரிவித்த நீதிபதிகள், அரசுத் தரப்பினரை கேள்விகளால் சிதறடித்தனர்.  அதில் "பம்பாவில் வாகன நிறுத்தம் கிடையாது. நிலக்கல்லில்தான் நிறுத்த வேண்டும் என்ற விதி இருக்கிறது. பின்பு, எதனடிப்படையில் சென்னையைச் சேர்ந்த மனிதி அமைப்பு பெண்களின் வாகனங்களுக்கு மட்டும் பம்பா வரை அனுமதியளிக்கப்பட்டது ? " என்ற கேள்வியை எழுப்பினர்.

SOURCE: The Hindu, The News Minute

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Related Tags : KeralaHigh CourtBindhuKanaga DurgaSabarimalaEntryGovernment
Advertisement:
Advertisement:
[X] Close