[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி
  • BREAKING-NEWS சென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்

பொருளாதார ரீதியான 10 சதவித இட ஒதுக்கீடு மசோதா தாக்கல்

10-reservation-bill-as-introduce-in-lok-sabha

பொருளாதார ரீதியில் நலிவுற்ற பொதுப் பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீட்டு மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

Image result for reservation for general category

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு இ‌ட ஒதுக்கீடு நடைமுறையில் பொருளாதார ரீதியில் நலிவுற்ற பொதுப் பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீட்டை வழங்க திட்டமிட்டுள்ளது. இதற்காக டெல்லியில் நடைபெற்ற அமைச்சரவை கூட்‌டத்தில் முடிவு‌ எடுக்கப்பட்டுள்ளது. அதில் இட ஒதுக்கீடுகள் 50 சதவிகிதத்திற்கு மிகக் கூடாது என்ற உச்ச நீதிமன்றம் முன்னர் வழங்கிய தீர்ப்பால் பொருளாதார ரீதியில் நலிவுற்ற பொது பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவதில் சிக்கல் உள்ளது. எனவே ஒட்டுமொத்த இட ஒதுக்கீட்டிற்கான உச்ச வரம்பை 50 சதவிகிதத்தில் இருந்து 60 சதவிகிதமாக அதிகரிக்க வசதியாக அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர அரசு முடிவு செய்தது.

அதன்படி தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் இன்று  நலிவுற்ற பொதுப் பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீட்டு மசோதாவை மக்களவையில் மத்திய சமூக நலத்துறை அமைச்சர் தாவர் சந்த் கெலாட் தாக்கல் செய்தார். மேலும் சமூக ரீதியாக சாதி அடிப்படையில் அளிக்கப்பட்டு வந்த இட ஒதுக்கீடு பொருளாதார ரீதியாகவும்  இம் மசோதா வழிவகை செய்யும். இதனைதொடர்ந்து 10% இட ஒதுக்கீட்டு மசோதாவை நாளை மாநிலங்களவையில் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டம்.
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close