[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடகா: இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரிய வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் பரவலாக 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சூரியனை ஆய்வு செய்ய அடுத்த ஆண்டு ஆதித்யா விண்கலம் அனுப்பப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது

ஹெலிகாப்டர் கதவு விழுந்து 2 கடற்படை வீரர்கள் உயிரிழப்பு

two-sailors-dead-in-mishap-at-kochi-naval-base

கடற்படை ஹெலிகாப்டர் கதவு கீழே விழுந்ததில் இரண்டு கடற்படை வீரர்கள் உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கொச்சியில் கடற்படை தளம் இருக்கிறது. இங்கு ஏராளமான ஹெலிகாப்டர்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். நேற்றும் சில ஹெலிகாப்டர்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அப்போது ஒரு ஹெலிகாப்டரின் கனமான கதவு, சரியாக மாட்டப்படாமல் தொங்கிக் கொண்டிருந்தது. அப்போது எலெக்ட்ரிக்கல் பிரிவைச் சேர்ந்த வீரர்கள் நவீன்,. அஜீத் சிங் ஆகியோர் அந்தப் பக்கமாக நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று அந்த கதவு அவர்கள் மீது விழுந்தது.

இதில் அவர்கள் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து உடனடியாக ராணுவ மருத்துவமனைக்கு அவர்கள் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். உயிரிழந்த நவீன், ஹரியானா மாநிலம், பிவானி மாவட்டத்தை சேர்ந்தவர். அஜீத் சிங், ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார்.

இந்த சம்பவம் அங்கு பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக, கடற்படை தளத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close