[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றம் இன்று விசாரணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் பழைய சொத்துவரி முறையே தொடரும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவிப்பு
  • BREAKING-NEWS சர்க்கரை குடும்ப அட்டைகள் வைத்திருப்பவர்கள், விரும்பினால் அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றிக் கொள்ளலாம்: தமிழக அரசு
  • BREAKING-NEWS வரும் 29-ம் தேதி இந்தியா வருகிறார் இலங்கையின் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்ச

எதிர்க்கட்சிகளின் கூட்டணி சுயநலமானது : பிரதமர் மோடி 

opposition-s-only-interest-is-dynasty-not-development-pm-modi

கொள்கைக்காக அல்லாமல் சுயநலத்திற்காகவே எதிர்க்கட்சிகள் மெகா கூட்டணியை அமைக்கின்றன என பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்துரையாடி வருகிறார். அந்த வகையில் இன்று வட சென்னை, மத்திய சென்னை, மதுரை, ‌‌திருச்சி, திருவள்ளூர் பகுதி பாஜக நிர்வாகிகளுடன் கல‌ந்துரையாடினார். இந்த நிகழ்ச்சியில் பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

இதில் தொண்டர்களுடன் கலந்துரையாடிய போது காங்கிரஸ் க‌ட்சியின் குறைகளையும், பாஜகவின் சாதனைகளையும் மக்களிடம் எடுத்துக்கூற வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார். மேலும் பேசிய அவர், பல்வேறு அரசியல் தலைவர்கள் மெகா கூட்டணி குறித்து பேசி வருகின்றனர், குடும்ப அரசியலை முன்னிறுத்துவது தான் மெகா கூட்டணி. இதில் குடும்ப ஆ‌ட்சி தான் நடைபெறும். அந்தக்கூட்டணி சுயநலத்திற்கானது, ‌கொள்கை சார்ந்தது இல்லை. மக்களுக்கு மெகா கூட்டணி பற்றி தெரியும் என்பதால், நிச்சயமாக அந்த கூட்டணியை ஏற்க மாட்டார்கள். அந்த மெகா கூட்டணி பதவிக்காக அமைக்கப்படுகிறது, மக்களின் நலனுக்காக இல்லை என்று கடுமையாக விமர்சித்தார். மேலும் மெகா கூட்டணி குடும்ப அரசியலை விரும்புகிறது, இந்தியா ஜனநாயகத்தை விரும்புகிறது எனவே அது சுயநலக் கூட்டணி என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

 .

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close