[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

“ராகுல்தான் பிரதமர் வேட்பாளர் என காங்கிரஸ் கூறவில்லை” - குஷ்பு

kushboo-said-rahul-was-not-the-prime-ministerial-candidate-from-the-congress

ராகுல்தான் பிரதமர் வேட்பாளர் என்று காங்கிரஸில் இருந்து யாரும் கூறவில்லை என அக்கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார்.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக மாபெரும் கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சி முயற்சித்து வருகிறது. மெகா கூட்டணி அமைக்க தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு பல்வேறு கட்சி தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அந்த முயற்சியின் தொடர்ச்சியாக, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முதல்நாள் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது.

ஆனால், எதிர்க்கட்சிகளின் கூட்டணி குறித்து பாஜக விமர்சித்து வருகிறது. பாஜகவின் பிரதமர் வேட்பாளர் மோடி என்றும் காங்கிரஸ் கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை தெரிவிக்க முடியுமா என்றும் பாஜக கேள்வி எழுப்பி வருகிறது. காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றால் தான் பிரதமராவேன் என்று ஏற்கெனவே ராகுல் காந்தி கர்நாடக தேர்தல் பிரசாரத்தின் போது கூறியிருந்தார்.

இதையடுத்து நடைபெற்ற 5 மாநில தேர்தலில் 3 மாநிலங்களில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று பாஜகவை தோற்கடித்தது. மற்ற 2 இடங்களிலும் மாநில கட்சிகளே வெற்றி பெற்றன. இதனால் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகத்தில் உள்ளனர்.

இதைத்தொடர்ந்து, சென்னையில் நடைபெற்ற கருணாநிதி சிலைத் திறப்பு விழாவில், ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட தான் முன்மொழிவதாக காங்கிரஸுடன் கூட்டணி வைத்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார். ஸ்டாலினின் இந்த அறிவிப்புக்கு மற்ற கூட்டணி கட்சிகள் எதிர்ப்பையும், காங்கிரஸ் கட்சி மவுனத்தையும் சம்பாதித்து உள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “ராகுல்தான் பிரதமர் வேட்பாளர் என்று காங்கிரஸில் இருந்து யாரும் கூறவில்லை. நேரம் வரும்போது யார் பிரதமர் வேட்பாளர் என முடிவு செய்வோம். ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன் மொழிந்த மு.க.ஸ்டாலினுக்கு நன்றி. தயாரிப்பாளர் சங்கத்தை பூட்டியது, விஷாலை கைது செய்தது ஜனநாயகத்திற்கு எதிரானது. 5 மாநில தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட பின் ஜிஎஸ்டியை குறைத்துள்ளனர். பிரதமர் வெளிநாடு செல்லும்போது அளிக்கப்படும் வரவேற்புக்கு 55 ஆண்டுகளாக இருந்த காங்கிரஸ் ஆட்சிதான் காரணம்” எனத் தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close