[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உலகச் சாம்பியன்ஷிப் பேட்மிண்டனில் பட்டம் வென்று வரலாற்று சாதனை படைத்தார் பி.வி.சிந்து.
  • BREAKING-NEWS வேதாரண்யத்தில் இரண்டு தரப்பினரிடையே மோதல்: காவல்நிலையம் மீது கல்வீச்சு
  • BREAKING-NEWS காஞ்சிபுரம் கங்கையம்மன் கோயில் குளத்தில் கிடந்த மர்மப் பொருள் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு.
  • BREAKING-NEWS தமிழகத்தில் எந்த விதத்திலும் தீவிரவாதம் தலைதூக்க முடியாது: ஜெயக்குமார்
  • BREAKING-NEWS அருண் ஜெட்லியின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்

அம்பானி மகள் திருமணம் : சொர்க்கலோகம் போல காட்சியளித்த அன்டில்லா

isha-ambani-and-anand-piramal-wedding

தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகள் திருமணம் பெரும் நட்சத்திரங்கள் திரள வெகு விமரிசையாக மும்பையில் நடைபெற்றது.

தொழிலதிபரும் நாட்டின் முதல் பெரும் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகள் இஷாவின் திருமண விழா விமரிசையாக நடைபெற்றது. மும்பையில் உள்ள முகேஷ் அம்பானியின் பிரமாண்டமான சொகுசு மாளிகையான அன்டில்லாவில் திருமண நிகழ்வுகள் கலைக்கட்டின. மணமக்கள் இஷா மற்றும் ஆனந்த் பிரமாலை வாழ்த்த வெளிநாடுகள் மற்றும் உள்நாட்டிலிருந்து அரசியல் தலைவர்கள், தொழில் துறையினர், திரைப்பட நட்சத்திரங்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர். 

அமெரிக்க முன்னாள் அமைச்சர் ஹிலரி கிளின்டன், பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், ஷாருக் கான், ஆமிர் கான் என ஏராளமானோர் அன்டில்லாவில் குவிந்தனர். புதுமண தம்பதிகளான ரன்வீர்சிங், தீபிகா படுகோன் ஜோடி மற்றும் பிரியங்கா சோப்ரா தனது கணவருடன் கலந்துகொண்டார்.

தமிழக நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவியுடன் பங்கேற்றார். இதுதவிர முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணப் முகர்ஜி, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், முதலமைச்சர்கள் தேவேந்திர பட்னவிஸ், மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோரும் திருமண நிகழ்வில் பங்கேற்றனர்.

27 அடுக்குகளை கொண்ட அன்டில்லா மாளிகை சொர்க்கலோகம் போல வண்ண விளக்குகளாலும் கண் கவரும் மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. முன்னதாக திருமண விழாவிற்கு வருகை தந்த மணமக்களை வண்ணமயமாக உடையணிந்த இளைஞர்களும், இளம்பெண்களும் நடனமாடி வரவேற்றனர்.

மணப்பெண் இஷா இளஞ்சிவப்பு நிற லெஹங்கா ஆடையணிந்து வந்த நிலையில், மணமகளின் தாயான நீடா அம்பானி தங்க இழைகள் பதிக்கப்பட்ட சேலையை அணிந்து காண்போரை பிரமிக்க வைத்தார். திருமணத்தையொட்டி அங்கு இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close