[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS டெல்லியில் கூடிய எதிர்க்கட்சித்தலைவர்கள், குடியரசுத் தலைவரை சந்திக்க முடிவு
  • BREAKING-NEWS 2019 மக்களவை தேர்தல் தொடர்பாக டெல்லியில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS தேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
  • BREAKING-NEWS தமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்
  • BREAKING-NEWS காவிரி பிரச்னையில் மத்திய அரசு ஒருதலைபட்சமாக செயல்படுவது வருத்தம் அளிக்கிறது - மேகதாது அணை தொடர்பான தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில், காவிரியில் கர்நாடகா மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் முன்மொழியிடப்பட்டது

வங்கிகளின் வாராக் கடனுக்கு காங்கிரசே காரணம்- அமித் ஷா தாக்கு..!

bad-loans-are-results-of-congress-government-s-misdeeds-amit-shah

முந்தைய காங்கிரஸ் அரசுகளின் தவறான செயல்களால்தான் வங்கிகளின் வாராக்கடன் இந்த நிலைக்கு சென்றுள்ளதாக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அமித் ஷா குற்றம்சாட்டியுள்ளார்.

ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பேசிய அவர், வங்கிகளில் இப்போதுள்ள வாராக்கடன்கள் பிரதமர் மோடி அரசின்போது தரப்பட்டவையல்ல என்று தெரிவித்துள்ளார். பெரிய நிறுவனம் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான கோடி கடன் பெற்றுத் தந்ததில் நேரு குடும்பத்தைச் சேர்ந்த மருமகன் கமிஷன் பெற்றதாக சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா பற்றி மறைமுகமாக குறிப்பிட்டார்.

அந்த கமிஷனைக் கொண்டு பிகானெர் அருகே 150 ஹெக்டேர் நிலத்தை அவர் குறைந்த விலைக்கு வாங்கியதாக ஆங்கில நாளேடு செய்தி வெளியிட்டிருப்பதையும் அமித் ஷா சுட்டிக்காட்டினார். விஜய் மல்லையா, நிரவ் மோடி ஆகியோர் காங்கிரஸ் ஆட்சியின்போது தாராளமாக கடன் பெற்றவர்கள் என்றும், காங்கிரஸ் ஆட்சியின்போது தைரியமாக வலம் வந்த அவர்கள், மோடி அரசு வந்ததால்தான் வெளிநாட்டுக்கு தப்பினர் என்றும் அமித் ஷா கூறியுள்ளார்.

ராஜஸ்தானில் டிசம்பர் 7-ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பாஜக, காங்கிரஸ் கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தலில் பதிவான வாக்குகள் டிசம்பர் 11-ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும். தற்போது ராஜஸ்தானில் வசுந்தர ராஜே தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close