[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் புதிதாக 6 மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்கான அரசாணை வெளியீடு
  • BREAKING-NEWS டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியீடு
  • BREAKING-NEWS மகாராஷ்டிராவில் அமலுக்கு வந்தது குடியரசுத் தலைவர் ஆட்சி
  • BREAKING-NEWS சென்னையில் கடந்த சில நாட்களாக அதிகரித்து காணப்பட்ட காற்று மாசு குறைந்துள்ளது
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர்: கந்தர்பால் அருகே கண்ட்டில் நடந்த துப்பாக்கிச்சண்டையில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS தமிழகத்தில் வரும் 14ஆம் தேதிமுதல் 16ஆம் தேதிவரை 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு
  • BREAKING-NEWS அயோத்தியில் ராமர் கோயில்: அறக்கட்டளை அமைக்கும் பணி தொடக்கம்

யுபிஎஸ்சி தலைவராக பொறுப்பேற்றார் அரவிந்த் சக்‌சேனா 

arvind-saxena-takes-oath-as-chairman-upsc

யுபிஎஸ்சி அமைப்பின் தலைவராக அரவிந்த் சக்சேனா பொறுப்பேற்றுக் கொண்டார். 

கடந்த ஜூன் 20 ஆம் தேதி முதல் யுபிஎஸ்சி அமைப்பின் தற்காலிகத் தலைவராக இருந்து வந்தார். அதனையடுத்து, மத்திய பணியாளர் நலன் துறை அமைக்கசம் அரவிந்த் சக்சேனாவை யுபிஎஸ்சி தலைவராக நியமிக்க பரிந்துரைத்தது. இதுதொடர்பான கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி இருந்தது. 

இதனையடுத்து, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று அரவிந்த் சக்சேனாவை யுபிஎஸ்சி தலைவராக நியமனம் செய்வதற்கு ஒப்புதல் அளித்தார். இந்நிலையில், இன்று யுபிஎஸ்சி தலைவராக சக்சேனா பொறுப்பேற்றார். இவரது பதவிக்காலம் 2020, ஆகஸ்ட் 7 தேதி வரை இருக்கும். அதாவது, சக்சேனா 65 வயது நிறைவடையும் வரை பதவியில் இருப்பார். 

              

அரவிந்த் சக்சேனா பற்றி சில தகவல்கள்:-

  • டெல்லி பொறியியல் கல்லூரியில் சிவில் பிரிவில் பி.இ படித்தார். பின்னர், டெல்லி ஐஐடியில் அமைப்பு மேலாண்மை பிரிவில் எம்.டெக் படித்தார்.
  • 1978 இல் சிவில் சர்வீஸ் பணிக்கு தேர்வு செய்யப்பட்டார். முதலில் போஸ்டல் சர்வீஸ் பிரிவில் பணியாற்றினார்
  • 1988 முதல் கேபினேட் செயலளராக பணியாற்றினார்
  • தன்னுடைய நீண்ட கால அனுபவத்தில் ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் மற்றும் இமாச்சல பிரதேசம் மாநிலங்களில் பணியாற்றினார்.
  • யுபிஎஸ்சி ஆணையத்தில் 2015 ஆம் ஆண்டு மே 8 இல் உறுப்பினரானார். 
  • ஜூன் 20, 2018 இல் யுபிஎஸ்சி இடைக்கால தலைவராக நியமிக்கப்பட்டார்
  • யுபிஎஸ்சி தலைவராக நவம்பர் 28 இல் நியமிக்கப்பட்டார்

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close