[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இ-சிகரெட் விற்பனை, உற்பத்தி, ஏற்றுமதி இறக்குமதிக்கு தடை - மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு
  • BREAKING-NEWS தாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
  • BREAKING-NEWS இந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு
  • BREAKING-NEWS சென்னை உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இடிமின்னலுடன் கனமழை. வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக மழை நீடிக்கும் எனத் தகவல்

காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு: மின்சாரம் துண்டிப்பு, மக்கள் அவதி!

jammu-and-kashmir-in-darkness-after-season-s-first-snowfall

ஜம்மு காஷ்மீரில் பனிப்பொழிவு அதிகமாக காணப்படுவதால், ஸ்ரீநகர் விமான நிலையத்தில் இருந்து புறப்படவிருந்த பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. 

ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதத்தில் ஜம்மு-காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்திரகாண்ட் ஆகிய மாநிலங்களில் பனிப்பொழிவுகள் காணப்படும். இந்த வருடமும்  அங்கு பனிப்பொழிவு தொடங்கியுள்ளது. வழக்கத்தை விட இந்த வருடம் அதிகப் பனிப்பொழிவுக் காணப்படு வதால் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் இருந்து புறப்படவிருந்த பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. தரையிறங்க வேண்டிய விமானங்கள்  ஜம்முவுக்கு திருப்பி விடப்பட்டன. 

பனிப்பொழிவால் அங்கு மோசமான வானிலை நிலவி வருகிறது. இதனால் சாலை போக்குவரத்தும் கடுமையாகப் பாதிப்படைந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ஸ்ரீநகரின் பல்வேறு பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருப்பதால் ஏராளமான வீடுகள் இருளில் மூழ்கியுள்ளன. பனிப்பொழிவு காரண மாக நீரோட்டம் தடைப்பட்டுள்ளது. 

இதே போல் இமாச்சலப் பிரதேசத்திலும் பனிப்பொழிவு அதிகரித்திருப்பதால் ஆப்பிள் பழங்கள் கருகத் தொடங்கியுள்ளன. இதனால் விவசாயி கள் வேதனை அடைந்துள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close