[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS கூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை
  • BREAKING-NEWS வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக நவ.23ம் தேதி முதல் 24ம் தேதிவரை தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு
  • BREAKING-NEWS சபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு

கர்நாடகாவில் பரபரப்பு: காங்கிரஸில் மீண்டும் இணைந்த பாஜக வேட்பாளர்!

ramanagara-bjp-candidate-l-chandrashekar-rejoins-congress

கர்நாடக இடைத்தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் மண்டியா, பல்லாரி, சிவமொக்கா ஆகிய 3 பாராளுமன்றத் தொகுதிகளுக்கும், ராமநகரா மற்றும் ஜமகண்டி ஆகிய  சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் நாளை இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியி டுகிறது. இதில், ராமநகரா தொகுதியில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் முதலமைச்சர் குமாரசாமி போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார்.

(அனிதா குமாரசாமி)

ஆனால் அவர் சென்னப்பட்டணா தொகுதியிலும் வெற்றி பெற்றிருந்ததால், ராமநகரா தொகுதியில் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தி ருந்தார். இதனால் அங்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் அவரது மனைவி அனிதா குமாரசாமி போட்டியிடு கிறார். 

இந்த தொகுதியில் பா.ஜனதா சார்பில், எல்.சந்திரசேகர் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர், அதில் இருந்து விலகி கடந்த சில வாரங்களுக்கு முன்புதான், எடியூரப்பா முன்னிலையில் பா.ஜ.கவில் சேர்ந்திருந்தார்.

ராமநகரா தொகுதியில் எல்.சந்திரசேகர் தீவிர பிரசாரம் செய்தார். இடைத்தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது.

இந் நிலையில், நேற்று காலையில் பா.ஜ.க வேட்பாளர் எல்.சந்திரசேகர் இடைத்தேர்தல் போட்டியில் இருந்து விலகுவதாக திடீரென்று அறிவித்தார். அதோடு, பா.ஜ.கவில் இருந்து விலகுவதாகவும், காங்கிரசில் மீண்டும் சேருவதாகவும் தெரிவித்தார். அதோடு, காங்கிரஸ் எம்.பி. டி.கே.சுரேஷ் முன்னிலையில் காங்கிரஸில் அவர் மீண்டும் இணைந்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, மாநில பாஜக தலைவர் எடியூரப்பா மீது புகார்களைத் தெரிவித்தார்.  பா.ஜனதா தலைவர்கள் மீதான அதிருப்தியால் இந்த முடிவை எடுத்ததாகவும் அதனாலேயே காங்கிரஸ் கட்சியில் மீண்டும் சேர்ந்ததாகவும் தெரிவித்துள் ளார். இடைத் தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் பா.ஜக வேட்பாளர் விலகி இருப்பது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close