[X] Close
JUST IN
  • BREAKING-NEWS காரைக்கால் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் கேசவன்
  • BREAKING-NEWS வேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு
  • BREAKING-NEWS கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது
  • BREAKING-NEWS கஜா புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட விபத்துகளில் தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27 ஆனது
  • BREAKING-NEWS 21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS கடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு
  • BREAKING-NEWS ‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை

முன்னாள் இஸ்ரோ தலைவர் உள்ளிட்ட 5 பேர் பாஜகவில் இணைந்தனர்..!

former-isro-chairman-madhavan-nair-4-others-join-in-bjp-keral

முன்னாள் இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் உள்ளிட்ட 5 முக்கிய நபர்கள் பாஜகவில் இணைந்துள்ளனர்.

கேரள மாநிலம் கன்னூரில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சிக்கு பின் இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர் உள்ளிட்ட 5 முக்கிய நபர்கள் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளனர். மாதவன் நாயர், திருவாங்கூர் தேவசம் போர்டு முன்னாள் தலைவர், கேரள மாநில காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜி ராமன் நாயர் உள்ளிட்ட 5 பேர் பாஜகவில் இணைந்துள்ளனர்.

இதுகுறித்து மாதவன் நாயர் கூறும்போது, “நான் சமீப காலமாகவே பாரதிய ஜனதா கட்சிக்கு பணியாற்றி வந்தேன். தற்போது தேசியத் தலைவர் அமித் ஷா முன்னிலையில் முறைப்படி இணைந்துள்ளேன். இந்தியாவின் மேம்பாடு குறித்த பிரதமர் மோடியின் எண்ணங்கள் என்னை அதிகளவில் ஈர்த்ததால் பாரதிய ஜனதா கட்சியின் இணைந்துள்ளேன்” என தெரிவித்தார்.

முன்னதாக கன்னூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாரதிய ஜனதா தேசிய தலைவர் அமித் ஷா, 'சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழைவதை கண்டித்து போராட்டம் நடத்திவரும் பக்தர்களுக்கு எதிராக மாநில கம்யூனிஸ்ட் அரசு செயல்படுகிறது. மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்திய ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் உள்பட 2 ஆயிரம் பக்தர்களை கைது செய்ததற்கு கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன். போராட்டத்தை ஒடுக்கும் செயலில் முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான அரசு தொடர்ந்து ஈடுபடுமானால் அதற்காக பெரிய விலையை கொடுக்க வேண்டியிருக்கும். அரசின் இந்த செயல் நெருப்புடன் விளையாடுவது போன்றதாகும்” என தெரிவித்திருந்தார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close