[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.23 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட சாத்தூர் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலுக்கு தயாராக இருக்க மாநில அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு; சொந்த மாவட்டத்திலோ அல்லது 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்திலோ பணியாற்றும் அரசு அதிகாரிகளை பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் இடமாற்றம் செய்ய உத்தரவு
  • BREAKING-NEWS வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு கடந்த 4 நாட்களில் 1 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்
  • BREAKING-NEWS பத்திரிகையாளர் கொலை வழக்கில் சாமியார் குர்மீத் ராம் ரஹீமிற்கு ஆயுள் தண்டனை விதிப்பு - பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு
  • BREAKING-NEWS திருச்சி: மணப்பாறை அருகே ஆவாரங்காடு ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என 71பேர் காயம்
  • BREAKING-NEWS சென்னை வண்டலூர் பூங்காவில் காணும் பொங்கலை முன்னிட்டு 3 மணி நிலவரப்படி 40,000பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்

“பாதிரியார் குரியகோஸ் மரணம் இயற்கையானது” - காவல்துறை 

there-is-no-mystery-in-father-kuriakose-dead-says-police

கேரள கன்னியாஸ்திரி பாலியல் வழக்கில் முன்னாள் பேராயர் பிராங்கோவுக்கு எதிராக சாட்சியம் அளித்த பாதிரியார் குரியகோஸ் மரணம் இயற்கையானது என ஜலந்தர் காவல்துறை தெரிவித்துள்ளது.

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள ஜலந்தர் டயோசிஸுக்கு உட்பட்ட தேவாலயத்தில், பிராங்கோ முல்லக்கல் என்பவர் பிஷப்பாக இருந்தார். இவர், அங்கு பணிபுரியும் கன்னியாஸ்திரி ஒருவரை, 2014 முதல் 2016 வரை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில், பிராங்கோ மீது தேவாலய நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும் புகார் கொடுத்து இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகியும் போலீசார் அவரை கைது செய்யாததை கண்டித்தும் ஐந்து கன்னியாஸ்திரிகள் கோட்டயத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரிக்கு நியாயம் கிடைக்கும் வரை இந்தப் போராட்டம் தொடரும் எனத் தெரிவித்தனர். ஆனால், தம்மீது வீண் பழி போடப்படுவதாக பிஷப் பிராங்கோ கூறினார். இந்த விவகாரம் கேரளாவில் விஸ்வரூபம் எடுத்தது.

இந்நிலையில் தன்னை ஜலந்தர் பிஷப் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக நீக்க வலியுறுத்தி வாடிகன் நிர்வாகத்திற்கு பிராங்கோ கடிதம் எழுதியிருந்தார். பிஷப் பிராங்கோவின் கோரிக்கையை ஏற்று வாடிகன் அவரை தற்காலிக நீக்கம் செய்துள்ளது. இந்நிலையில் கேரள சிறப்பு விசாரணை குழுவினர் அவரிடம் விசாரணை நடத்தி கைது செய்தனர். போதுமான ஆதாரங்கள் மற்றும் விசாரணைக்குப் பிறகே இந்தக் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கோட்டயம் காவல்துறை கண்காணிப்பாளர் ஹரி சங்கர் கூறினார். சிறையில் அடைக்கப்பட்ட பிராங்கோ ஜாமினில் விடுதலை ஆனார்.

இந்நிலையில் கேரள பிஷப் பிராங்கோ முல்லக்கல் மீது பாலியல் புகார் செய்திருந்த, ஜலந்தர் டயோசிசை சேர்ந்த பங்குதந்தை குரியகோஸ் கட்டுத்தாரா, பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் போக்பூர் தேவாலயத்தில் உள்ள அவரது அறையில் நேற்று மர்மமான முறையில் இறந்து கிடந்தார். பிஷப் மீதான வழக்கில் முக்கிய சாட்சியான இவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தது சந்தேகத்தை ஏற்படுத்திய நிலையில் குரியகோஸ் மரணம் இயற்கையானது என ஜலந்தர் காவல்துறை தெரிவித்துள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கைக்குப் பின்னர் மரணம் குறித்து உறுதிசெய்யப்படும் என காவல் அதிகாரி ஜக்தீஸ் ராஜ் தெரிவித்தார். குரியகோஸ் சடலத்தை வெளியே எடுக்க ஊர் மக்கள்தான் அறைக் கதவின் பூட்டை உடைத்துள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.  

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close