[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்
  • BREAKING-NEWS சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது
  • BREAKING-NEWS வயநாடு தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வான ராகுல் காந்தி, மக்களவையில் இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் முன்னிலையில் எம்.பி.யாக பதவியேற்றார்
  • BREAKING-NEWS மேற்கு வங்கம்: கொல்கத்தாவில் மருத்துவர்கள் சங்க பிரதிநிதிகளுடன் முதல்வர் மம்தா பானர்ஜி பேச்சுவார்த்தை
  • BREAKING-NEWS சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், திருச்சி, கடலூர், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலையில் அதி தீவிர அனல் காற்று வீசும் என எச்சரிக்கை
  • BREAKING-NEWS தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு
  • BREAKING-NEWS தமிழக முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை தலைவிரித்து ஆடுகிறது; அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்- டிடிவி தினகரன்

பாதுகாப்பு அதிகாரியால் சுடப்பட்ட நீதிபதியின் மகனும் உயிரிழப்பு

gurgaon-judge-s-son-dies-10-days-after-being-shot-at-by-security-guard

பாதுகாப்பு அதிகாரியால் சுடப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஹரியானா நீதிபதியின் மகனும் இன்று அதிகாலை உயிரிழந்தார்.

ஹரியானா மாநிலம் குர்கான் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி கிருஷ்ணன் காந்த். இவர் மனைவி ரீத்து (38), மகன் துருவ் (18). நீதிபதி கிருஷ்ணனின் பாதுகாப்பு அதிகாரியாக மஹிபால் சிங் என்பவர் கடந்த ஒன்றரை வருடத்துக்கும் மேலாக பணியாற்றி வந்துள்ளார். இதனிடையே ரீத்து மற்றும் துருவ் கடந்த சில நாட்களுக்கு முன் மார்க்கெட்டுக்குச் சென்றனர்.  அவர்களின் பாதுகாப்பிற்காக மஹிபால் சிங் சென்றிருக்கிறார்.

Read Also -> போதையில் மோசமான நடத்தை: மகனின் கழுத்தை நெரித்துக் கொன்றார் அம்மா!  

அனைத்து பொருட்களையும் வாங்கிய பின் வீடு திரும்பியபோது யாரும் எதிர்பாராதவிதமாக மஹிபால் சிங், ரீத்துவை,  துப்பாக்கியால் சுட்டார். பின்னர் அவர்களது மகன் துருவையும் சுட்டார் மஹிபால். இதில் பலத்த காயமடைந்தவர்கள், இரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தனர். பின்னர் மஹிபால் கார் மூலம் தப்பிச் சென்றுவிட்டார்.

Read Also -> வரதட்சணை கேட்ட மாப்பிள்ளைக்கு வினோத தண்டனை!  

இதை நீதிபதிக்கு போன் செய்து சொன்ன மஹிபால், இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு கைது செய்யப்பட்டார். அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டார்.

Read Also -> ’ஆபத்தான செல்ஃபி’: மன்னிப்புக் கேட்டார் மகாராஷ்ட்ரா முதல்வரின் மனைவி!  

இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ரீத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். துருவின் உடல்நிலையும் கவலைக் கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

Read Also -> “சபரிமலை விவகாரத்தில் பின்வாங்கவில்லை” - பினராயி விஜயன்

(மஹிபால் சிங்)

அவர் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக கடந்த 15 ஆம் தேதி மருத்துவர்கள் கூறினர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை அவர் உயிரிழந்துள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close