[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.83 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி
  • BREAKING-NEWS மக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்
  • BREAKING-NEWS ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி
  • BREAKING-NEWS கோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS திமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி
  • BREAKING-NEWS பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு

கன்னியாஸ்திரி பாலியல் வழக்கு: முக்கிய சாட்சி மர்ம மரணம்!

kerala-nun-rape-case-key-witness-found-dead

கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில் முக்கிய சாட்சி இன்று காலை மர்மமான முறையில் இறந்து கிடந்தார். 

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள ஜலந்தர் டயோசிஸுக்கு உட்பட்ட தேவாலயத்தில், பிராங்கோ முல்லக்கல் என்பவர் பிஷப் பாக இருந்தார். இவர், அங்கு பணிபுரியும் கன்னியாஸ்திரி ஒருவரை, 2014 முதல் 2016 வரை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த தாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

(பிராங்கோ)

இந்நிலையில், பிராங்கோ மீது தேவாலய நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும் புகார் கொடுத்து இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகியும் போலீசார் அவரை கைது செய்யாததை கண்டித்தும் ஐந்து கன்னியாஸ்திரிகள் கோட்டயத்தில் போராட் டத்தில் ஈடுபட்டனர். பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரிக்கு நியாயம் கிடைக்கும் வரை இந்தப் போராட்டம் தொடரும் என தெரிவித்தனர். ஆனால், தம் மீது வீண் பழி போடப்படுவதாக பிஷப் பிராங்கோ கூறினார். இந்த விவகாரம் கேரளாவில் விஸ்வரூபம் எடுத்தது.

இந்நிலையில் தன்னை ஜலந்தர் பிஷப் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக நீக்க வலியுறுத்தி வாடிகன் நிர்வாகத்திற்கு பிராங்கோ கடிதம் எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தில் இந்த வழக்கை சந்திக்க நேரம் செலவிட வேண்டியுள்ளதால் தம்மை பொறுப்பில் இருந்து விடுவிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். செப்டம்பர் 16 ஆம் தேதி கடிதம் எழுதப்பட்ட நிலையில், பிஷப் பிராங்கோவின் கோரிக்கையை ஏற்று வாடிகன் அவரை தற்காலிக நீக்கம் செய்துள்ளது.

 இந்நிலையில் கேரள சிறப்பு விசாரணை குழுவினர் அவரிடம் விசாரணை நடத்தி கைது செய்தனர். போதுமான ஆதாரங்கள் மற்றும் விசாரணைக்குப் பிறகே இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கோட்டயம் காவல்துறை கண்காணிப்பாளர் ஹரி சங்கர் கூறினார். சிறையில் அடைக்கப்பட்ட பிராங்கோ ஜாமினில் விடுதலை ஆனார்.

(குரியகோஸ் கட்டுத்தாரா)

இந்நிலையில் கேரள பிஷப் பிராங்கோ முல்லக்கல் மீது பாலியல் புகார் செய்திருந்த, ஜலந்தர் டயோசிசை சேர்ந்த பங்குதந்தை குரியகோஸ் கட்டுத்தாரா, பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் போக்பூர் தேவாலயத்தில் உள்ள அவரது அறையில் இன்று காலை மர்மமான முறையில் இறந்து கிடந்தார். பிஷப் மீதான வழக்கில் முக்கிய சாட்சியான இவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர் சாவில் மர்மம் இருப்பதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close