[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் பரவலாக 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சூரியனை ஆய்வு செய்ய அடுத்த ஆண்டு ஆதித்யா விண்கலம் அனுப்பப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS கர்நாடக சட்டப்பேரவையில் இன்று மாலை 6 மணிக்குள் வாக்கெடுப்பு நடத்த சபாநாயகர் கெடு விதித்துள்ளார்
  • BREAKING-NEWS கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது

பாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்

few-congress-mla-s-join-bjp-from-goa

கோவாவில் கூட்டணி சேர்ந்து பாஜக ஆட்சி அமைத்துள்ளது. அம்மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர் உடல்நிலை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை பயன்படுத்தி, ஆட்சி அமைக்க முடியும் என்ற நம்பிக்கையில், காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினர். 

Read Also -> சபரிமலை விவகாரத்தில், தீர்ப்பை நிறைவேற்றுவோம்: பினராயி விஜயன்  

கோவா மாநில காங்கிரஸ் தலைவர் கூறும் போது “தனிப்பெரும் கட்சியாக உள்ள காங்கிரசுக்கு அழைப்பு விடுக்காமல், பாஜகவுக்கு ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தது தவறு என்பதாலும், ஆட்சி அமைக்க போதுமான இடங்கள் காங்கிரஸ் பக்கம் உள்ளதாலும் எங்களுக்கு ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க வேண்டும்” என தெரிவித்தார்.

Read Also -> நட்சத்திர ஓட்டலில் துப்பாக்கியால் மிரட்டிய முன்னாள் எம்.பி. மகன்!

காங்கிரஸின் கோரிக்கை தொடர்பாக ஆளுநர் முடிவெடுக்காவிட்டாலும், தொடர்ந்து ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கைகளில் காங்கிரஸ் ஈடுபட்டு வந்தது. ஆனால் தற்போது நடந்துள்ள விஷயம் காங்கிரஸ் எதிர்பார்க்காத ஒன்றாக அமைந்திருக்கிறது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 2 எம்.எல்.ஏ.க்கள் பாஜக தலைவர் அமித்ஷாவை சந்தித்து தங்களை பாஜகவில் இணைத்துக் கொள்ள உள்ளனர். இன்று மாலை அவர்கள் அதிகாரப்பூர்வமாக பாஜகவில் இணைகிறார்கள்

Read Also -> மாடலை கொன்று சூட்கேஸூக்குள் அடைத்து வீசிய மாணவன் கைது!

 

செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏ சுபாஷ், “எங்களோடு சேர்ந்து இன்னும் சிலரும் வரும் நாட்களில் பாஜகவில் இணைவார்கள்” என தெரிவித்துள்ளார். எம்.எல்.ஏ.க்களின் இந்த திடீர் முடிவு காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close