[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • BREAKING-NEWS அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்
  • BREAKING-NEWS அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.94 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.18 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
  • BREAKING-NEWS இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய டிசம்பர் 20 வரை தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்

ம.பி உள்ளிட்ட 3 மாநிலங்களில் பாஜகவை காங்கிரஸ் வீழ்த்தும்.. கருத்துக் கணிப்பில் தகவல்..!

congress-will-win-3-states-pre-poll-survey

மத்தியப் பிரசேதம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பாரதிய ஜனதாவை வீழ்த்தி காங்கிரஸ் கட்சியே ஆட்சி அமைக்கும் என தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத் இன்று அறிவித்தார். 5 மாநிலங்களில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 11-ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் மத்தியப் பிரசேதம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பாரதிய ஜனதாவை வீழ்த்தி காங்கிரஸ் கட்சியே ஆட்சி அமைக்கும் என தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. ஏபிபி நியூஸ் மற்றும் சி வோட்டர் ஆகியவை இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் இந்த தகவல் வெளியாகி உள்ளது. 

அதன்படி 200 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி 142 இடங்களை கைப்பற்றும் என கணிக்கப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சி வெறும் 56 இடங்களிலும் மற்றவை 2 இடங்களிலும் வெற்றி பெறும் என கருத்துக் கணிப்பு சொல்கிறது. ராஜஸ்தானில் தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சராக வசுந்தர ராஜே உள்ளார். ராஜஸ்தானை பொருத்தவரை காங்கிரஸ் கட்சியும், பாஜகவும் மாறிமாறியே ஆட்சி செய்து வருகின்றன. எனவே தற்போது காங்கிரஸ் கட்சி வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளதாகவே பார்க்கப்படுகிறது. அதேசமயம் கருத்துக்கணிப்பு படி 142 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெறுமாயின் அது பாரதிய ஜனதாவிற்கு பலத்த அடியாகவே இருக்கும்.

சத்தீஸ்கரை பொருத்தவரை மொத்தமுள்ள 90 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 47 இடங்களையும், பாரதிய ஜனதா கட்சி 40 இடங்களையும் கைப்பற்றும் என கருத்துக்கணிப்பு சொல்கிறது. மற்றவை 3 இடங்களை பிடிக்கும் எனவும் சொல்லப்படுகிறது. சத்தீஸ்கரில் கடந்த 2003-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து தற்போது வரை பாஜகவே ஆட்சி செய்து வருகிறது. கருத்துக் கணிப்புபடி காங்கிரஸ் கட்சி வெற்றிபெறும் பட்சத்தில் 15 ஆண்டுகால பாஜக ஆட்சி முடிவுக்கு வரும். இது காங்கிரஸ் கட்சிக்கு மிகப் பெரிய வெற்றியாக பார்க்கப்படும்.

மத்தியப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 230 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 122 இடங்களிலும், பாரதிய ஜனதா 108 இடங்களிலும் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் கடந்த 15 ஆண்டுகளாகவே பாரதிய ஜனதா ஆட்சி தான் நடைபெற்று வருகிறது. முதலமைச்சராக தற்போது சிவ்ராஜ் சிங் சவுகான் உள்ளார். ஒருவேளை கருத்துக்கணிப்புபடி காங்கிரஸ் வெற்றி பெறும் பட்சத்தில் அது காங்கிரஸ் கட்சிக்கும் அதன் தலைவர் ராகுல்காந்திக்கும் மிகப்பெரிய வெற்றியாகவே பார்க்கப்படும்.

சத்தீஸ்கர் மற்றும் மத்தியப் பிரதேசத்தை பொருத்தவரை கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளபோதிலும் இரு கட்சிகளுக்கும் வெற்றி வித்தியாசம் பெரிதாக இல்லை. எனவே மதில்மேல் பூனையாக எந்த கட்சியும் வெற்றி பெறலாம். அதேசமயம் பணமதிப்பிழப்பு நடவடிக்கை, பெட்ரோல் டீசல் விலை உயர்வு உள்ளிட்டவைகளால் பாஜக ஆட்சி மீது மக்கள் அதிருப்தியால் இருப்பதாக கருத்துக் கணிப்பு சொல்கிறது. அதனடிப்படையிலேயே காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என்றும் கருத்துக் கணிப்பு சொல்கிறது.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close