[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

“ஆண் போலீசாருக்கும் உண்டு தாய்மை குணம்”...நெகிழ வைக்கும் சம்பவம்

telangana-cop-babysits-while-mother-writes-exam-win-hearts

தெலங்கானாவில் இளம் தாய் ஒருவர் தேர்வு எழுத சென்ற நேரத்தில் அவரின் குழந்தையை பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் பத்திரமாக பார்த்துக் கொண்ட நெகிழ்ச்சிகர சம்பவம் அரங்கேறியுள்ளது. இதுதொடார்பான புகைப்படம் ஒன்றும் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

தெலங்கானாவை சேர்ந்தவர் சுதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் தான் சுதாவிற்கு குழந்தை பிறந்துள்ளது. இருப்பினும் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய குடும்பத்தை சேர்ந்த சுதாவிற்கு வேலைக்கு போக வேண்டிய கட்டாயம். அதற்காக பல முயற்சியும் செய்திருக்கிறார். முதுகலை பட்டம் படித்திருந்தாலும் கூட அவர் எதிர்பார்த்த எந்த வேலையும் கிடைக்கவில்லை. இதனால் அரசு அறிவித்த போலீஸ் கான்ஸ்டபிள் தேர்வுக்கு விண்ணப்பித்தார். அதன்படி தேர்வு எழுத வாய்ப்பும் வந்தது.

 

கையில் 4 மாத குழந்தையுடன் தேர்வறைக்கு சென்றார் சுதா. ஆனால் குழந்தையை தேர்வறைக்குள் கொண்டு செல்ல அனுமதி இல்லை. எனவே தனது 4 மாத குழந்தையை அங்குள்ள குழந்தைகள் யைமத்தில் சுதா கொடுத்துவிட்டு தேர்வறைக்கு சென்றுவிட்டார். அங்கு பொறுப்பில் இருந்தது ஒரு 14 வயது சிறுமிதான். அந்த சிறுமியால் 4 மாத குழந்தையின் அழுகையை சரிசெய்ய முடியவில்லை. அந்த நேரத்தில் தேர்வு நடைபெறும் அறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தலைமை காவலர் ரஹ்மான், குழந்தை அழுவதை கண்டிருக்கிறார். உடனடியாக குழந்தையை லாவகமாக தூக்கி பாட்டு பாடி சமாதானப்படுத்தியுள்ளார். பின்னர் சுதா தேர்வு முடித்துவிட்டு திரும்பி வரும்வரை குழந்தையை பத்திரமாக கவனித்துக்கொண்டுள்ளார். குழந்தைக்கு ஏற்றவாறு ஆராரிரோ பாடி ரஹ்மான் சமாதானம் செய்யும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. பலரும் ரஹ்மானின் செயலை பாராட்டி வருகின்றனர்.

இதுகுறித்து ரஹ்மான் கூறும்போது, “எனக்கு 48 வயதாகிறது. இரண்டு குழந்தைகள் உள்ளனர். நல்ல முறையில் அவர்களை படிக்க வைத்துள்ளேன். மகன் சீனாவில் மருத்துவம் பயின்று வருகிறார். பெண் இந்தாண்டு பள்ளிப் படிப்பை முடிக்கிறார். பொதுமக்களுக்கு உதவத்தான் நாங்கள் இங்கு இருக்கிறோம். எனவே அவர்களைவிட எனக்கு பெரிதாக ஒன்றும் தெரியவில்லை” என்றார்.

Read Also -> விஐபி-கள் பயணம்: ஏர் இந்தியாவுக்கு மத்திய அரசு ரூ.1146 கோடி பாக்கி!

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close