[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ
  • BREAKING-NEWS ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • BREAKING-NEWS அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்
  • BREAKING-NEWS அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.94 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.18 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

92 வயதில் ஆதார் பிரச்னைக்கு தீர்வை பெற்று தந்தவர் இவர்தான்?

justice-ks-puttaswamy-judge-behind-the-aadhaar-judgment-india-news

ஆதார் அட்டைக்கு அதிரடியான தீர்ப்பை பெற மூலக்காரணமான இருந்தவர் யார் என்பது குறித்து தெரிய வந்துள்ளது. அதில் சிறப்பு என்னவென்றால் இந்தச் சட்டபோராட்டம் நடத்தியவருக்கு 92 வயது.

ஆதார் அடையாள அட்டையை கட்டாயமாக்கும் சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில் உச்சநீதிமன்றம் அதிரடியாக நேற்று தீர்ப்பளித்திருந்தது. 

ஆதார் அடையாள எண் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது என அறிவிக்ககோரியும், நலத்திட்டங்களுக்கு ஆதாரை கட்டாயமாக்கும் சட்டத்தை எதிர்த்தும் தாக்கல் செய்யப்பட்ட 31 மனுக்கள் மீது தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நபர் அரசியல் சாசன அமர்வு 4 மாதங்களில் 38 நாட்கள் விசாரணை நடத்தி, கடந்த மே மாதம் 10-ம் தேதி தீர்ப்பை ஒத்திவைத்திருந்தது.

இந்நிலையில் ஆதார் தொடர்பாக தொடரப்பட்ட அனைத்து வழக்குகளுக்கும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில் “ஒருவருக்கு கொடுக்கப்படும் ஆதார் அடையாள அட்டையை வேறு ஒருவருக்கு கொடுக்க முடியாத வகையில் அது வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆதார் அடையாள அட்டைக்கும் மற்ற அடையாள அட்டைகளுக்கும் வித்தியாசம் உள்ளது. போலியாக ஆதார் அட்டைகளை தயாரிக்க இயலாது. அது தனித்துவமானது. ஒதுக்கப்பட்டவர்களுக்கும் அடையாளம் கொடுத்தது ஆதார். கல்வியால் நம்முடைய கைரேகை கையெழுத்தானது. தொழில்நுட்பத்தால் நம்முடைய கையெழுத்து கைரேகையாக மாறியிருக்கிறது. எனவே ஆதார் செல்லும்” என்று அரசியல் சாசன அமர்வில் 5-ல் 3 நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

மேலும் தனியார் நிறுவனங்கள் ஆதாரை கட்டாயப்படுத்தக் கூடாது. மிக முக்கியமாக குடிமக்களுக்கான அடிப்படை உரிமைகள் ஆதார் இல்லை என்பதற்காக மறுக்கக் கூடாது. மேலும் குழந்தைகளுக்கு ஆதாரம் கட்டாயம் எனவும், ஆதார் சட்டத்தில் சில திருத்தங்களை கொண்டு வரவும் உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியது.

இந்த வரலாற்று தீர்ப்பை பலரும் வரவேற்றுள்ளனர். ஆனால் ஆதார் பிரச்னைக்கு முதல்முதலாக சட்டபோராட்டத்தை தொடங்கியவர் பற்றிய செய்தியை பலரும் மறந்துவிட்டனர். 92 வயதிலும் இந்திய நாட்டின் தலையாய பிரச்னைக்கு ஒருவர் சட்டப் போராட்டம் நடத்தி இருக்கிறார் என்பது வியப்பான விஷயம். கர்நாடக மாநிலத்தின் உயர்நீதிமன்ற நீதிபதியாகவும் ஆந்திர மாநிலத்தின் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் உறுப்பினராகவும் பணியாற்றியவர் முன்னாள் நீதியரசர் கேஎஸ் புட்டாசாமி. இவர்தான் முதன்முதலாக ஆதார் தொடர்பாக பொதுநல வழக்கை தொடர்ந்தவர். இதில் மட்டுமல்ல; அந்தரங்க உரிமையை அடிப்படை உரிமையாக அறிக்க வேண்டியும் இவர்தான் முதல் மனுவை தாக்கல் செய்தார். 

இந்தத் தள்ளாத வயதிலும் புட்டாசாமி தீர்ப்புக் குறித்து ஆர்வமாக இருந்திருக்கிறார். “அவர், பத்திரிகைகளை, செய்திகளைகூட பார்க்கவில்லை. அவர் எப்போதும் ஆதார் பற்றிய தீர்ப்பு எப்படி வரும் என்பதில்தான் எதிர்பார்ப்போடு இருந்தார்” என்கிறார் அவரது மகன் பிபி ஹேமாந்த். 2012ல் ஆரம்பித்த அவரது சட்டப் போராட்டத்திற்கு 2018ல்தான் ஒரு வெளிச்சம் பிறந்திருக்கிறது. அதாவது தனது 86 வயதில் புட்டாசாமி மனுத்தாக்கல் செய்துள்ளார். இவரது சட்ட ஆலோசனைக்கு கர்நாடக உயர்நீதி மன்றத்தில் உடன் பணியாற்றிய ராமா ஜாய்ஸ் சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார். 

“நான் வழக்கு தொடுத்தபோது அது நிர்வாக ஆணையாக மட்டுமே இருந்தது. ஆதார் சட்டம் நிறைவேற்றப்படவில்லை. அரசியலமைப்பு பிரிவு 19க்கு எதிராக இருந்த அந்தச் சட்டத்தின் பிரிவுகள் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளன” என்று பிபிசியிடம் பேசியுள்ளார் புட்டாசுவாமி. மேலும் முழுமையாக தீர்ப்பை படித்து ஆலோசித்த பின்பே இதனை பற்றி தெளிவாக கருத்து கூற முடியும் என்று கூறியுள்ளார் புட்டாசாமி. தற்செயலாக நண்பர்களுடன் விவாதித்துக் கொண்டிருந்த போதுதான் இந்தப் பொதுநல வழக்கான யோசனை இவருக்கு வந்ததாகவும் அவர் தி எக்னாமிக்ஸ் டைம்ஸ் உடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close