[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கிழக்கு டெல்லி மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் போட்டியிடுகிறார்
  • BREAKING-NEWS சென்னையில் நடைபெறுவதாக இருந்த ஐபிஎல் 2019 இறுதிப்போட்டி ஐதராபாத்துக்கு மாற்றம்
  • BREAKING-NEWS கொழும்பு கொச்சிக்கடை கந்தானையில் தேவாலயம் அருகே கைப்பற்றப்பட்ட வெடிகுண்டை செயலிழக்க செய்ய முயன்றபோது குண்டு வெடித்தது
  • BREAKING-NEWS இலங்கையின் கொழும்பு பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பேருந்தில் இருந்து 87 டெட்டனேட்டர்கள் பறிமுதல்; வெடி குண்டுகளை செயலிழக்க செய்யும் பணியில் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை; கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை, அழகிய மண்டபம், மூலச்சல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு காரணமாக இன்று நள்ளிரவு முதல் அவசரநிலை பிரகடனம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த மேலும் 3 மாதம் அவகாசம் தேவை என உச்சநீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல்

இரண்டு மனைவிகளால் விபரீதம்.. சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூர கொலை..!

9-year-old-gang-raped-in-kashmir

காஷ்மீரில் 9 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் குழந்தையின் வளர்ப்புத் தாயும் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டம் உரி பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமி சுதா. (பெயர் மாற்றப்பட்டுள்ளது). சுதாவின் அப்பாவுக்கு மொத்தம் இரண்டு மனைவிகள். சுதா இரண்டாவது மனைவிக்கு பிறந்த மகள். இந்நிலையில் கடந்த 23-ஆம் தேதி வெளியே சென்ற சுதா அதன்பின் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து பல இடங்களில் சுதாவை தேடியுள்ளனர். எங்கும் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே சுதாவை காணவில்லை என அவரின் அப்பா காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

போலீசார் சிறப்பு விசாரணை குழு அமைத்து விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்போது அங்கிருந்த காடு ஒன்றில் முற்றிலும் சிதைக்கப்பட்ட நிலையில் சுதாவின் உடல் கண்டெடுக்கப்பட்டது. சுதாவை யார் கொலை செய்திருப்பார்..? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்போது சுதாவின் வளர்ப்புத் தாய் ( சுதா அப்பாவின் முதல் மனைவி) மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. போலீசார் அவரிடம் துருவி துருவி விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர் கொலைக் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

போலீசாரிடம் அவர் கூறியதாவது, “ சுதா மீதும் அவர் அம்மா மீதும் தான் என் கணவருக்கு அதிக பாசம். எப்போதும் அவர்களுடனே இருப்பார். என்னையும், என் குழந்தையையும் அவ்வளவாக கண்டுகொள்ள மாட்டார். இதனால் சுதா மீது எனக்கு வெறுப்பு வந்தது. அவளை கொலை செய்ய திட்டமிட்டேன். அதன்படி கூர்மையான ஆயுதங்களுடன் சுதாவை காட்டிற்குள் அழைத்து சென்றேன். என் 14 வயது மகனும் என்னுடம் வந்தார். அங்கு வைத்து கொலை செய்தோம்” என கூறியுள்ளார்.

விசாரணை நடத்திய போலீசார் பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளனர். அதன்படி “ சுதாவை காட்டிற்குள் அழைத்துச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். சுதாவின் வளர்ப்புத் தாய் முன்னே இந்த பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது. அதுமட்டுமின்றி சுதாவின் கண்களை நோண்டியுள்ளனர். சுதாவின் ஒன்றுவிட்ட அண்ணன், சுதாவின் மண்டையை கோடாரியால் உடைத்துள்ளார். பின்னர் சுதாவின் உடல் பகுதியிலும் அமிலத்தை வீசியுள்ளனர். பின்னர் அங்குள்ள புதர் ஒன்றில் சுதாவின் சிதைந்த உடலை போட்டுவிட்டு இலைகளை வைத்து மூடிவிட்டு சென்றுள்ளனர்” என தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக சுதாவின் வளர்ப்புத் தாய் அவரின் மகன் உள்பட 5 பேரை போலீசார் இதுவரை கைது செய்துள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close