[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே? - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது
  • BREAKING-NEWS சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது

கடன் ஏய்ப்பாளர்கள் யாருக்கும் பாஜக ஆட்சியில் கடன் வழங்கவில்லை: பிரதமர் மோடி

modi-taik-about-national-democratic-alliance

நாட்டின் மிகப்பெரிய கடன் ஏய்ப்பாளர்கள் யாருக்கும், பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் கடன் வழங்கப்படவில்லை என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கிச் சேவையை தொடங்கி வைத்துப் பேசிய பிரதமர் மோடி, நான்கைந்து வருடங்களுக்கு முன்னர் வங்கியின் பெரும்பான்மையான நிதி, ஒரு குடும்பத்திற்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டதாக கூறினார். காங்கிரஸ் கட்சி அறிமுகப்படுத்திய தொலைப்பேசி வங்கி சேவை மூலம், தொழிலதிபர்கள் ஒரு தொலைப்பேசி அழைப்பின் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் கடன் பெற முடிந்ததாக அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் மிகப்பெரிய 12 கடன் ஏய்ப்பாளார்களுக்கு கடந்த 2014ம் ஆண்டுக்கு முன்னர் கடன் வழங்கப்பட்டதாகவும், அந்த கடன்களை வசூலிக்க விரைவான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பிரதமர் மோடி கூறினார். பெரிய நபர்களின் உந்துதலால் அளிக்கப்பட்ட ஒவ்வொரு ரூபாய் கடனும் வசூலிக்கப்படும் என பிரதமர் குறிப்பிட்டார். காங்கிரஸ் கட்சி நாட்டின் பொருளாதாரத்தை ஒரு கண்ணி வெடி களத்தில் விட்டுச் சென்றிருப்பதை பதவியேற்ற சில நாட்களிலேயே உணர்ந்ததாக கூறினார். முந்தைய அரசின் முறைகேடுகளை வெளிக்கொண்டுவந்தது தங்களது அரசுதான் என பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close