[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிப்பு
  • BREAKING-NEWS கொச்சி விமான நிலையம் மூடல்
  • BREAKING-NEWS வரலாற்று நாயகன் அஜித் வடேகர் மறைந்தார்
  • BREAKING-NEWS இந்தியாவின் 72வது சுதந்திர தினம் - கோலாகல கொண்டாட்டம்
  • BREAKING-NEWS இன்று கூடுகிறது திமுக அவசர செயற்குழு
  • BREAKING-NEWS மெரினாவில் கருணாநிதிக்கு இடம் கொடுத்த தீர்ப்புக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்திருந்தால் நானே போராட்டத்தில் இறங்கியிருப்பேன் -ரஜினிகாந்த்
  • BREAKING-NEWS சென்னையில் நடிகர் சங்கம் சார்பில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி

பிரதமர் மோடியின் பேச்சு அவைக் குறிப்பில் இருந்து நீக்கம்

pm-s-remarks-on-congress-leader-deleted-in-parliament

மாநிலங்களவையில் பேசிய பிரதமர் மோடியின் ஆட்சேபத்திற்குரிய பேச்சு அவைக் குறிப்பில் இருந்து நீக்கம் செய்யப்பட்டது. மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு இந்த நடவடிக்கையை மேற்கொண்டார்.

மாநிலங்களவைத் துணை தலைவராக இருந்த பி.ஜே.குரியனின் பதவிக்காலம் கடந்த ஜூலை 1ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் அந்தப் பதவிக்கு நேற்று காலை 11 மணிக்கு தேர்தல் நடைபெற்றது. பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஐக்கிய ஜனதா தளத்தின் ஹரிவன்ஷ் நாராயணன் சிங், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் சார்பில் பி.கே.ஹரிபிரசாதும் போட்டியிட்டனர். முடிவில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஹரிவன்ஷ் வெற்றி பெற்றார்.

இதனையடுத்து மாநிலங்களையில் பேசிய பிரதமர் மோடி, ஹரிவன்ஷ் நாராயணன் சிங்கிற்கு தனது வாழ்த்தினை தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், எதிர்க்கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த ஹரிபிரசாத்தை விமர்சித்து பேசினார். எனவே பிரதமர் மோடியின் ஆட்சேபத்திற்குரிய கருத்தை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் வலியுறுத்தினர். அதனை பரிசீலித்து முடிவெடுப்பதாக மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்திருந்தார். தொடர்ச்சியாக எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று பிரதமர் மோடியின் பேச்சை அவைக் குறிப்பில் இருந்து நீக்கி வெங்கையா நாயுடு உத்தரவிட்டார். அதேபோல மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதவாலே பேசிய பேச்சும் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது. பொதுவாக நாடாளுமன்றத்தில் பேசும் பிரதமரின் பேச்சுகள் அரிதிலும் அரிதாகத் தான் நீக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close