[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
  • BREAKING-NEWS தமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்
  • BREAKING-NEWS காவிரி பிரச்னையில் மத்திய அரசு ஒருதலைபட்சமாக செயல்படுவது வருத்தம் அளிக்கிறது - மேகதாது அணை தொடர்பான தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில், காவிரியில் கர்நாடகா மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் முன்மொழியிடப்பட்டது
  • BREAKING-NEWS சென்னையில் இன்று இரவும் நாளையும் விட்டு விட்டு மழை தொடரும்; ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மீதான குற்றச்சாட்டு பற்றிய வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS நெஞ்சுவலி காரணமாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதி

பெண்ணை வீட்டிலேயே சிறைவைத்த வக்கிர இளைஞர் - ஒருதலைக் காதல் விபரீதம்

bhopal-girl-held-hostage-by-fanatic-lover-at-her-own-house-rescued-after-12-hours

இளம்பெண்ணை அவரது சொந்தவீட்டிலேயே அடைத்து வைத்து, தன்னை கல்யாணம் செய்யுமாறு துன்புறுத்தி இளைஞர் கைது செய்யப்பட்டார்.

மத்தியப் பிரதேசத்தின் போபால் பகுதியில் பெண் (30 வயது) ஒருவர் வசித்து வருகிறார். இவரை அதே பகுதியை சேர்ந்த ஒரு இளைஞர், ஒரு தலைபட்சமாக காதலித்து வந்துள்ளார். அந்த இளைஞர், அப்பெண்ணிடம் பேச முயற்சித்து ஆங்காங்கே பின்தொடர்ந்துள்ளார். அந்த இளைஞரின் காதலை அப்பெண் நிராகரித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் விரக்தி அடைந்த அந்த இளைஞர், அப்பெண்ணை அவரது சொந்த வீட்டிலேயே யாரும் இல்லாத நேரத்தில் சிறை பிடித்துள்ளார்.

அப்பெண் தப்பிக்க முயற்சித்த போது, துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளார். இதனால் பயந்துபோன அப்பெண் வேறு வழியின்றி வீட்டில் இருந்து வெளியேற முடியாமல் இருந்துள்ளார். இந்த விவகாரம் அக்கம்பக்கத்தினர் மூலம், காவல்துறைக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து அந்த வீட்டை காவல்துறையினர் சுத்தி வளைத்துள்ளனர். அப்போது யாரேனும் உள்ளே வந்தால், அப்பெண்ணை கொன்று விடுவதாக அந்த நபர் மிரட்டியுள்ளார். அவரது கையில் துப்பாக்கி இருப்பதை அறிந்த காவலர்கள், உள்ளே நுழையாமல் பொறுமை காத்துள்ளனர். 

அப்போது வீடியோ காலிங் மூலம் செய்தியாளர்களிடம் தொடர்பு கொண்ட அந்த இளைஞர், பெண்ணை துப்பாக்கி முனையில் வைத்திருக்கும் காட்சிகளை காட்டி மிரட்டியுள்ளார். அத்துடன் தனக்கு முத்திரைத் தாள் ஒன்றும், போன் சார்ஜர் ஒன்றும் வேண்டும் எனக்கூறியுள்ளார். அதுமட்டுமின்றி அந்தப் பெண்ணை தான் காதலிப்பதாகவும், திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும் தெரிவித்துள்ளார். அவரிடம் இருந்து பெண்ணை மீட்க காவல்துறையினர் பல திட்டங்களை தீட்டியுள்ளனர். இறுதியில் 12 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு அப்பெண் மீட்கப்பட்டார். அந்த நபரும் கைது செய்யப்பட்டார். மீட்கப்பட்ட உடன் இருவரும் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அப்பெண் மீட்கப்படும் போது ரத்தக்கறையுடன் இருந்துள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close