[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
  • BREAKING-NEWS தமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்
  • BREAKING-NEWS காவிரி பிரச்னையில் மத்திய அரசு ஒருதலைபட்சமாக செயல்படுவது வருத்தம் அளிக்கிறது - மேகதாது அணை தொடர்பான தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில், காவிரியில் கர்நாடகா மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் முன்மொழியிடப்பட்டது
  • BREAKING-NEWS சென்னையில் இன்று இரவும் நாளையும் விட்டு விட்டு மழை தொடரும்; ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மீதான குற்றச்சாட்டு பற்றிய வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS நெஞ்சுவலி காரணமாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதி

மகளின் தோழியை மிரட்டி பாலியல் வன்கொடுமை: போதை பிசினஸ்மேன் கைது!

businessman-held-for-raping-daughter-s-friend-in-belaire-home

குடி போதையில் மகளின் தோழியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த, அப்பா கைது செய்யப்பட்டுள்ளார்.

டெல்லி அருகிலுள்ள குருகிராமைச் சேர்ந்தவர் ராம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). வயது 45. தொழிலதிபர். இவரது 18 வயது மகள் வெளிநாட்டில் படித்து வருகிறார். சமீபத்தில் அவர் குருகிராம் திரும்பியிருந்தார். அவருக்கு தனது பழைய தோழிகளைப் பார்க்க வேண்டும் என்று ஆசை ஏற்பட் டது. ஒவ்வொருவரையாக சந்தித்துப் பேசினார். 

இதையடுத்து தன்னுடன் பல வருடங்களாக ஒன்றாகப் படித்த சுமதியை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வீட்டுக்கு அழைத்தார். வந்தார் சுமதி. நலம் விசாரித்துக்கொண்ட அவர்கள் பழைய கதைகளை மகிழ்ச்சியாகப் பேசிக்கொண்டிருந்தனர். தோழியின் அம்மா ஊரில் இல்லாததால், ராம் அவர்களை டின்னருக்காக ’சைபர் ஹப்’புக்கு அழைத்துச் சென்றார். அங்கு ராம் அளவுக்கு அதிகமாக மது குடித்துள்ளார். முடித்துவிட்டு நள்ளிர வில் வீட்டுக்குத் திரும்பியுள்ளனர். 

சுமதி, சிறுவயதில் இருந்தே அவர் வீட்டுக்கு வந்து செல்பவர் என்பதால் ராமுக்கு நன்றாக அறிமுகமானவர். இதையடுத்து ராம் வீட்டிலேயே, தோழியின் அருகில் படுத்துத் தூங்கிவிட்டார் சுமதி. அதிகாலை 4 மணியளவில், சுமதியை யாரோ உசுப்பினார்கள். கண்ணைத் திறந்து பார்த்தால் ராம் நின்றிருந்தார். இவர் ஏன் நிற்கிறார் என்பது தெரியாமல், ஆச்சரியமாக என்ன என்று கேட்டார் சுமதி. ‘வெளியே வா பேசணும்’ என்று அழைத்தார் ராம். பின்னர் தனது படுக்கை அறைக்கு அழைத்துச் சென்று கதவை பூட்டினார். புரிந்துகொண்ட சுமதி, தன்னை விட்டு விடும்படி கெஞ்சினார். அவரை மிரட்டிய ராம், போதை தெளியாமல் சுமதியை பாலியல் வன்கொடுமை செய்தார். பின் இதை யாரிடம் சொல்லக் கூடாது என்றும் மிரட்டியுள்ளார்.

இந்தச் சம்பவத்தை அடுத்து வீட்டுக்கு வந்த சுமதி, தன் அம்மாவிடம் நடந்த சம்பவத்தைச் சொன்னார். அவரது ஆலோசனைப்படி குருகிராம் போலீசில் புகார் கொடுத்தார் சுமதி. போலீசார், ராமிடம் விசாரித்தபோது பாலியல் வன்கொடுமை செய்ததை ஒப்புக்கொண்டார் ராம். இதை யடுத்து அவரை கைது செய்துள்ளனர்.


 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close