[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்
  • BREAKING-NEWS மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
  • BREAKING-NEWS எக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்காக நிலம் தர விருப்பம் இல்லாத விவசாயிகளை துன்புறுத்தக்கூடாது - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS கேரளாவில் கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பிஷப் பிராங்கோ பணியிடை நீக்கம் - வாடிகன் நிர்வாகம்
  • BREAKING-NEWS மொஹரம் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பகுதிகளுக்கு நாளை அரசு பொது விடுமுறை - புதுச்சேரி அரசு
  • BREAKING-NEWS இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவிப்பு

சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் வீடியோவை வெளியிட்ட இந்தியா ! காங்கிரஸ் கண்டனம்

surgical-strike-video-opponents-lash-government

 

சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் காட்சிகளை அரசு வெளியிட்டுள்ள நிலையில் இதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. 

காஷ்மீரின் உரி பகுதியில் ஊடுருவிய பயங்கரவாதிகள், திடீரென தாக்குதல் ந‌டத்தியதில் 17 வீரர்கள் உயிரிழந்தனர். இதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி எச்சரித்ததை தொடர்ந்து, கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 28 ஆம் தேதி இரவு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் சிறப்பு படை வீரர்‌கள் புகுந்து துல்லிய தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் அங்கிருந்த 7 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் அழித்துவிட்டு, வெற்றிகரமாக திரும்பியதாகவும் கூறப்பட்டது. ஆனால், பாகிஸ்தான் இதனை மறுத்தது. எல்லை தாண்டி வந்து‌ தனது மண்ணில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதாகவும், இதில் பாகிஸ்தான் வீரர்கள் இருவர் கொல்லப்பட்டதாகவும் குற்றம்சாட்டியிருந்தது. 

இந்நிலையில், துல்லியத் தாக்குதல் நடந்து ‌636 நாட்களுக்குப் பின் அதற்கான ஆதாரங்கள் அடங்கிய காணொலியை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது. துருவ் ஹெலிகாப்டர் மூலம் சென்று, பாரசூட் மூலம் குதித்த சிறப்புப் படை வீரர்கள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த 4 இலக்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்தும் காட்சிகள் அந்த காணொலியில் இடம்பெற்றுள்ளது. வீரர்களின் தலைகவசத்தில் இருந்த கேமரா மூலம் இந்த காட்சிகள் படம்பிடிக்கப்பட்டுள்ளன.


சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் காட்சிகளை அரசு வெளியிட்டுள்ள நிலையில் இதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. நாட்டுக்காக நமது ராணுவ வீரர்கள் ரத்தம் சிந்தி நடத்திய ஒரு தாக்குதலை மத்திய அரசு அரசியல் ஆதாயங்களுக்காக பயன்படுத்துவதாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா குற்றஞ்சாட்டியுள்ளார். ராணுவத்தினரின் தீரங்களை தெரிவித்து ஆதாயம் பெறும் பாஜக அரசு பாகிஸ்தானுடன் உள்ள பிரச்னையை தீர்க்க இயலாமல் திணறி வருவதாகவும் சுர்ஜேவாலா தெரிவித்தார். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மற்றும் மன்மோகன் சிங் ஆகியோர் அரசியல் வெற்றிக்கு ராணுவ வெற்றியைப் பயன்படுத்தவில்லை என்றார்.மோடி அரசு தோல்வி அடைந்த போது அவர்களின் அரசியல் நலனுக்காக இராணுவத்தின் வீராத்தை தவறாக பயன்படுத்துகின்றனர் என்றார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close