[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் அமலுக்கு வந்தது புதிய சொத்து வரி!
  • BREAKING-NEWS காஞ்சிபுரத்தில் கனமழையால் 18 ஆயிரம் நெல் மூட்டைகள் வீண்- விவசாயிகள் வேதனை
  • BREAKING-NEWS மணல் கடத்தலையும், அதில் நேர்மையான அதிகாரிகள் கொல்லப்படுவதையும் பார்த்துக்கொண்டிருக்க முடியாது- சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
  • BREAKING-NEWS சென்னையில் ரகசியமாக நடைபெறும் குட்கா விற்பனை- அதிரடி காட்டிய போலீஸ்!
  • BREAKING-NEWS சென்னையில் விடிய விடிய கனமழை
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யும் குழுவின் முதல் கூட்டம் சென்னையில் செப்.24ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது
  • BREAKING-NEWS மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் விழா லோகோவை டெல்லியில் வெளியிட்டார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

ஆட்டோ கட்டணம் அளிக்காததால் அடித்துக்கொலை

auto-driver-allegedly-beats-man-to-death

மகாராஷ்ட்ரா மாநிலம் புனே பகுதியில் ஒருவர் பலத்த காயங்களுடன் சாலையில் கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அப்பகுதிக்கு வந்த காவல்துறையினர் அந்த நபரை மீட்டு சிகிச்சைக்காக  மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவர் மரணமடைந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார். இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். ஆதார் அட்டை மூலம் அவர் லதூர் மாவட்டத்தை சேர்ந்த தனாஜி கோர்கே (Tanaji Korke) என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். 


கோர்கேவை படுகாயங்களுடன் மீட்கப்பட்ட பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அதில் ஒரு ஓட்டோவில் இருந்து இறங்கும் கோர்கேவை அதில் வந்தவர்கள் கடுமையாக தாக்குகின்றனர். இந்தத் தாக்குதலில் நிலைக்குலைந்த கோர்கே சாலையில் விழுகிறார். அவர் மீது தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்ட இருவர் அங்கிருந்து ஆட்டோவில் கிளம்புவதும் அதில் பதிவாகி இருந்தது. இதனையடுத்து விசாரணையை தீவிரப்படுத்திய காவல்துறையினர் ஆட்டோவின் பதிவெண் கொண்டு அதன் உரிமையாளர் குறித்த விவரங்களை சேகரித்தனர். இதனையடுத்து ஆட்டோ உரிமையாளரான அதுல் ஹட்கரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் கோர்கேவை தாக்கியதை அவர் ஒப்புக்கொண்டார். அதுலின் ஆட்டோவில் கோர்கே பயணித்துள்ளார். இறங்கும் போது அதுல் கேட்ட கட்டணத்தை தராமல் கொஞ்சம் குறைவாக கொடுத்துள்ளார்.இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த அதுல் தனது நண்பருடன் சேர்ந்து  கோர்கேவை கடுமையாக தாக்கி ஆட்டோவில் இருந்து கீழே தள்ளியுள்ளனர். பின்னர் இவர்கள் அங்கிருந்து புறப்பட்டு விட்டனர். இதனையடுத்து இருவர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கைது செய்து செய்து சிறையில் அடைத்தனர்.
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close