[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்; மேகதாது அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றத்தில் உடனடியாக தடை பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜியால் பெரிய அளவில் வெற்றி பெற முடியாது; கொல்கத்தாவில் நடந்த மாநாட்டில் மிகக் குறைவாகவே கூட்டம் கூடியது - கே.பாலகிருஷ்ணன்
  • BREAKING-NEWS வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யலாம் என தவறான தகவலை பரப்பியதாக லண்டனில் நடந்த நிகழ்ச்சி தொடர்பாகவும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மீதும் டெல்லி போலீசில் தேர்தல் ஆணையம் புகார்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி உறுதி - மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே
  • BREAKING-NEWS தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்குவது தாமதமாகும்; மத்திய தடுப்பு மருந்து தொழில்நுட்பக்குழு பரிந்துரையால் பிப்.3ல் போலியோ சொட்டு மருந்து முகாம் இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS பட்டாசு ஆலை தொடர்பான வழக்கில் விசாரணையை 29ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS அதிமுக உள்கட்சி விவகாரத்தில் பாஜக மூக்கை நுழைப்பது தவறானது - தம்பிதுரை எம்.பி.

'என் கெவினுக்காக போராடுறேன்': காதல் கணவனை ஆணவக்கொலைக்கு பலி கொடுத்த நீனுவின் சூளுரை

this-is-a-fight-for-kevin-neenu

“ நான் வீட்டிற்கு செல்கிறேன். கெவினை எதுவும் செய்து விடாதீர்கள் அவரை விட்டுவிடுங்கள் என கெஞ்சினேன்” நான் பயந்த மாதிரியே நடந்துவிட்டது. காதல் கணவனை இழந்த நீனுவின் கதறல்.

கடவுளின் தேசம் எனக் கூறப்படும் கேரளத்தில் தன் காதல் கணவனை ஆணவக்கொலைக்கு பலி கொடுத்து விட்டு தவித்து நிற்கிறார் ‘நீனு’. கத்தோலிக்க கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர் நீனு. கொல்லம் பகுதியில் செல்வாக்கு மிக்க குடும்பமாக இவரது குடும்பம் இருந்து வந்துள்ளது. இவரும் கோட்டயம் பகுதியை சேர்ந்த கெவின் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். கெவின் தலித் கிறிஸ்துவ குடும்பத்தை சேர்ந்தவர். இவர்களது காதலுக்கு நீனு குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இருவரும் கடந்த மாதம் திருமணம் செய்துகொண்டனர். இதனையடுத்து நீனு குடும்பத்தினர் காவல்நிலையத்தை நாடினர். அங்கு அவர்கள் நீனுவை கட்டாயப்படுத்தி அவரது பெற்றொருடன் அனுப்பி வைத்தனர். 

கெவின் தனது உறவினர் வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் அங்கு வந்த ஒரு கும்பல் கெவினையும் அவரது உறவினரான அனிஷையும் தாக்கிவிட்டு இருவரையும் கடத்தி சென்றுள்ளனர். மதியவேளையில் அனிஷை மட்டும் அந்தக்கும்பல் விடுவித்துள்ளனர். கெவின் குறித்து கேட்டதற்கு எங்கள் கட்டுப்பாட்டில் இருந்து அவன் தப்பிவிட்டான் என கூறியுள்ளனர்.மறுநாள் காலை தென்மலா காட்டுப்பகுதிக்கு அருகில் உள்ள கால்வாயில் கெவின் சடலமாக மீட்கப்பட்டார். 

கெவின் பெற்றோர்கள் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நீனுவின் தந்தை சாக்கோ , சகோதரர் சானு ஆகியோரை கைது செய்தனர்.நீனு தற்போது கெவினின் இல்லத்தில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் சாக்கோ நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தங்களது மகளை வீட்டிற்கு அனுப்பி வைக்குமாறு கோரிக்கை விடுத்தார். தந்தை என்ற முறையில் நான் தான் அவளது பாதுகாவலர். நீனு யாரோ ஒருவருடைய வீட்டில் இருக்கிறார்.மேலும் அந்த மனுவில் தனது மகளுக்கு மனநலம் சம்பந்தமான பிரச்னை இருப்பதால் திருவணந்தபுரத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் என தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய நீனு, தனது தந்தை கூறிய செய்தி அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்தார். நான் மனநலம் பாதிக்கப்பட்டவள் என எப்படி கூறலாம். நான் பன்னிரெண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் போது கவுன்சிலிங்காக அழைத்து சென்றனர். தற்போதைய நிலைமையில் எனது குடும்பத்தினருக்கு தான் கவுன்சிலிங் தேவைப்படுகிறது. எனக்கு அல்ல.எதற்காக கவுன்சிலிங் அழைத்துச் செல்லப்பட்டார் என்ற விவரத்தையும் நீனு தெரிவித்தார். கடந்த சில வருடங்களாக தனது தாய் - தந்தைக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்படும். அவர்கள் கோபமாக இருக்கும் போது என்னை கடுமையாக காயப்படுத்துவார்கள். என்னை குச்சிகளை கொண்டு கடுமையாக தாக்குவார்கள். ஒரு கட்டத்தில் என்னால் பொருக்க முடியாமல் நான் அவர்களை திரும்ப திட்ட ஆரம்பித்தேன். அவர்கள் அவ்வாறு நடந்துக்கொள்ளும் போது நான் கடுமையாக சத்தம் போட ஆரம்பித்தேன். இதன் காரணமாக தான் என்னை கவுன்சிலிங் அழைத்துச் சென்றனர் என்றார்.

கொல்லத்தில் எனது பாட்டி தாத்தாவுடன் இருந்த நாட்கள் பசுமையானது. நான் சுதந்திரமாக இருந்தேன். ஆனால் இது நீண்டநாட்கள் நீடிக்கவில்லை. எனது தாய் வெளிநாட்டில் இருந்து திரும்பியவுடன் எனது தந்தை புதிதாக கட்டிய வீட்டிற்கு குடியேறினோம். ஆரம்பத்தில் நான் எனது தாய் மற்றும் சகோதரன் மட்டுமே அங்கிருந்தோம். எனது தந்தை விடுமுறையின் போது மட்டும் வந்து செல்வார்.நான் 9ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த போது ஒரு பையன் என்னை காதலிப்பதாக கூறினான். இதுகுறித்து நான் எனது வீட்டில் தெரிவித்தேன் அதன் பின் அவன் என்னை நெருங்கவே இல்லை. பின்னர் தான் தெரிந்தது அவனை எனது குடும்பத்தினர் தாக்கியது தெரியவந்தது. அதன்பின்னர் யார் என்னிடம் நட்பாக பழகினாலும் காதலிப்பதாக கூறினாலும் எனது வீட்டில் தெரிவிப்பதில்லை என்றார்.

நீனு  வளரும் பருவத்தில் தனது குடும்பத்தினருடன் நட்பு இல்லாமலே பழகி வந்துள்ளார். சகோதரனிடம் அப்படியே இருந்துள்ளார். அவளது சகோதரன் 10ம் வகுப்பிற்கு பிறகு வெளியில் சென்று தங்கி படித்து வந்துள்ளார். பிறகு பணிக்காக பிற மாவட்டத்திற்கு சென்றுவிட்டார். நீனு பேசுகையில், எனது சகோதரனுக்கு எனது கனவு குறித்தும் எனது எண்ணங்கள் குறித்தும் எதுவும் தெரியாது என்று கூறியிருந்தார்.

இதன்காரணமாகவே தனது காதல் குறித்தும் காதலன் குறித்தும் வீட்டில் யாரிடமும் எதுவும் தெரிவிக்கவில்லை. நீனு 2016ஆம் ஆண்டு தனது கல்லூரி படிப்பை தொடங்கியுள்ளார். முதன்முதலில் ஒரு மெக்கானிக்காக தான் கெவின் அறிமுகமாகியுள்ளார். நீனு மற்றும் அவளது தோழி இருவரும் ஒன்றாக தான் கல்லூரிக்கு சென்றுவந்துள்ளனர். அனிதாவை பார்க்க அவளது நண்பர் பேருந்து நிலையம் வருவார். அவருடன்  கெவினும் வந்துள்ளார். இப்படி தான் நீனுவுக்கும் கெவினுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இருவரும் நண்பர்களாக பழகி வந்துள்ளார். மொபைல் எண்களை பரிமாற்றிக்கொண்டுள்ளனர். ஆரம்பத்தில் குறுஞ்செய்தியில் ஆரம்பித்த இவர்களது பழக்கம் நாளடைவில் நீண்ட நேரம் போனில் உரையாடும் அளவுக்கு வந்துள்ளது.

இந்நிலையில் தான் கெவின் தனது காதலை நீனுவிடம் தெரிவித்துள்ளார். அப்போதே நீனு தனது குடும்பத்தினர் குறித்து கெவினிடன் தெரிவித்துள்ளார். நீனுவின் தந்தை கத்தோலிக்க கிறிஸ்துவர்  தாய் இஸ்லாம் மதத்தை சார்ந்தவர் என்பதும் இதனால் அவர்களுக்கு ஏற்பட்ட பிரச்னைகள் குறித்தும் கூறியுள்ளார். ஆனால் கெவின் வழக்கமாக எல்லா காதலர்களுக்கு வரும் பிரச்னை தான் நாம் திருமணம் செய்துக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

நீனு பேசும்போது குழந்தை பருவத்தை அடுத்து தான் காதல் வயப்பட்ட சமயம் தான் என் வாழ்வில் பசுமையான தருணங்கள் என்றார். கெவின் என்னை பொன்னி என்றும் நான் அவனை இச்சா என்றும் செல்லமாக அழைப்பேன். நாங்களும் மற்ற காதலர்களை போன்று கோயில், தியேட்டர், மால் என எல்லா இடங்களுக்கும் சென்றோம். ஆனால் அப்போதும் எனது குடும்பத்தினர் குறித்து பயம் இருக்கும் என்றார்.கெவினுக்கு துபாயில் வேலை கிடைத்ததையடுத்து அங்கு சென்றுவிட்டார். காதலர் தினத்தன்று என்னை காண்பதற்காக என்னிடம் சொல்லாமல் துபாயில் இருந்து வந்துவிட்டார். ஆனால் இரண்டு நாட்கள் கழித்து தான் சந்தித்தோம் என்றார்.

மே மாதம் தான் நீனுவின் வாழ்க்கையில் புயல் வீச தொடங்கியது. நீனுவுக்கு வரன் தேட தொடங்கிய பெற்றோர்கள் அதற்காக அவரது விவரங்களை மேட்ரிமோனியில் பதிவிட்டுள்ளனர்.இதனையடுத்து இருவரும் பதிவு திருமணம் செய்துக்கொள்ள முடிவு செய்தனர்.அதன்படி கடந்த மே மாதம் 24ஆம் தேதி கோட்டயத்தை அடுத்த எட்டமனூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு திருமணம் செய்து கொண்டனர். அன்று இரவு கெவினின் உறவினர் இல்லத்தில் இருவரும் தங்கியுள்ளனர். இரவு தூங்க செல்லும் முன்பு தனது தந்தைக்கு போன் செய்து திருமணம் குறித்த தகவலை தெரிவித்துள்ளார். ஆனால் கெவின் குடும்பத்தினருக்கு அவர் கடத்தப்படும் வரை இவர்களது காதல் திருமணம் விவகாரம் தெரியாது. கெவின் காணாமல் போன பின்பு தான் அனைத்து விவரங்களும் அவர்களுக்கு தெரியும் என நீனு கூறினார்.

நான் எனது பெற்றோர்கள் குறித்து கவலையில் இருந்தேன். எதற்கு பயப்படாதே என கெவின் எனக்கு தைரியம் கூறீனார். மே 25ஆம் தேதி நான் விடுதிக்கு சென்றுவிட்டேன். கெவின் அவரது உறவினர் வீட்டில் இருந்தார், மே 26 இரவு இருவரும் நீண்ட நேரம் போனில் பேசினோம். அப்போது “ பொன்னி நீ எதுக்கும் கவலைப்படாதே. உன் பெற்றோர்கள் என்ன செய்வார்கள். என்னை முதலில் அடிப்பார்கள் ஆனால் பிறகு நம்மை ஏற்றுக்கொள்வார்கள். என்னை காலை 5.30 மணிக்கு எழுப்பி விடு” என்று கூறினான்.

நான் காலை 5.45 மணிக்கு கால் செய்தேன் ஆனால் கெவின் போனை எடுக்கவில்லை. சில மணி நேரங்கள் கழித்து தான் கெவின் கடத்தப்பட்ட விவரம் எனக்கு தெரியவந்தது. அதன்பின்னர் நாங்கள் காவல்நிலையம் சென்றோம். அங்கு தான் கெவினின் குடும்பத்தினர் முதன்முதலாக என்னை கண்டனர். கெவினுடன் கடத்தப்பட்ட அனிஷை மதியவேளையில் அந்தக்கும்பல் வீட்டில் விட்டு சென்றனர். அவர் என்னிடம் எனது உறவினரான நியாஸிடன் பேசச் சொன்னார். 

நான் போனில் அவரை தொடர்பு கொண்டு பேசினேன். “ நான் வீட்டிற்கு செல்கிறேன்.கெவினை எதுவும் செய்து விடாதீர்கள் அவரை விட்டுவிடுங்கள் என கெஞ்சினேன். ஆனால் அவர் பதில் எதும் பேசாமல் சிரித்துவிட்டு போனை கட் செய்துவிட்டார்”.  நான் பயந்த மாதிரியே நடந்துவிட்டது என நீனு கூறினார்.

தன் காதல் கணவன் மரணத்துக்கு நீதிகிடைக்க வேண்டி போராடி வருகிறார் நீனு. கெவினின் பெற்றோரும் நீனுவை தங்கள் வீட்டு பெண்ணாக ஏற்றுக்கொண்டுள்ளனர்.
 

நன்றி: The NEWS Minute

Source:  https://bit.ly/2JoIfWN

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close