[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.53 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.15 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS வடக்கு அந்தமான், கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு அடுத்த 12 மணி நேரத்திற்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS பணத்திற்காக வாக்களிப்பது தன்னைத்தானே விற்பதற்கு சமம்: வைகோ
  • BREAKING-NEWS பாஜக நோட்டுகள், டோக்கன்களை தந்து வாக்கு கேட்காது; திட்டங்களை தந்து மட்டுமே வாக்கு கேட்கும் - தமிழிசை
  • BREAKING-NEWS நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மன்னிப்புக் கேட்டார் ஹெச்.ராஜா!
  • BREAKING-NEWS பெண்கள் கரும்பல்ல; இரும்பு என்பதை நிரூபிக்கும் காலம் வந்துவிட்டது! - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.22 காசுகளாகவும் விலை நிர்ணயம்

காவிரி மேலாண்மை 'ஆணையம்' என பெயர் மாற்றம் ஏன்?

centre-submitted-changed-draft-regard-cauvery-issue-name-changed-as-cauvery-management-agency

காவிரி விவகாரத்தில் அனைத்து முடிவுகளையும் எடுக்கும் அதிகாரம் மேலாண்மை ஆணையத்திடமே இருக்கும் என திருத்தப்பட்ட வரைவுத்திட்டத்தில் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.

காவிரி விவகாரத்தில் கடந்த திங்கள்கிழமை மத்திய அரசு வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்தது. இந்த வரைவுத் திட்டம் தொடர்பாக மாநிலங்களின் கருத்துகள் கேட்கப்பட்டன. இந்தச் சூழலில் மாநிலங்களின் கருத்துகளுக்கு ஏற்ப திருத்தப்பட்ட வரைவுத் திட்டத்தை மத்திய அரசு இன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. காவிரி அமைப்புக்கு காவிரி மேலாண்மை வாரியம் என்ற பெயரை வைக்க அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில் அந்தப் பெயரை காவிரி மேலாண்மை ஆணையம் என மாற்றி மத்திய அரசு வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்தது. 

வாரியத்தை விட புதிய அமைப்புக்கு அதிகளவில் அதிகாரம் இருப்பதால் ஆணையம் என பெயர் மாற்ற முடிவெடுத்ததாக மத்திய அரசு கூறியுள்ளது. ஆனால் அமைப்பின் பெயர் குறித்த இறுதி முடிவை உச்சநீதிமன்றமே எடுக்கும். காவிரி அமைப்பின் தலைமையகத்தை பெங்களூருவில் இருந்து டெல்லிக்கு மாற்றலாம் என்ற கருத்தையும் மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது என திருத்தப்பட்ட வரைவுத் திட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது. அதே போல காவிரி அமைப்பின் உத்தரவுகளை மாநில அரசுகள் செயல்படுத்தவில்லை எனில் மத்திய அரசிடம் முறையிடலாம் என்பது மாற்றப்பட்டு அமைப்பிடம் மட்டுமே முறையிட முடியும் என கூறப்பட்டுள்ளது. 

        

இதனிடையே அணைகள் யார் கட்டுப்பாட்டில் இருக்கும் என்பது குறித்து கேரள தரப்பு வாதிட்டது. அதில் நீதிமன்றமே இறுதி முடிவை எடுக்கும் என கூறிய நீதிபதிகள், இனி எந்தத் தரப்பு கருத்தைகளையும், வாதங்களையும் ஏற்க மாட்டோம் என கூறினர். இந்த வழக்கில் நாளை மாலையோ அல்லது 22, 23 ஆம் தேதிகளிலோ தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதிகள் அறிவித்தனர்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close