[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உளவு பார்த்த புகாரில் கைது செய்யப்பட்டு பாகிஸ்தான் சிறையில் உள்ள குல்பூஷண்ஜாதவ் விவகாரத்தில் இந்தியாவிற்கு சாதகமான தீர்ப்பு: சாதகமான தீர்ப்பு வந்துள்ளதால்,அவரை பாகிஸ்தான் தூக்கிலிட முடியாது;பாகிஸ்தான் தனதுதீர்ப்பை மறுபரிசீலனை செய்யவேண்டும் -சர்வதேச நீதிமன்றம்
  • BREAKING-NEWS இந்த ஆண்டு ரூ.600 கோடி செலவில் 2 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழைபெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ போன்ற அனைத்து திட்டங்களுமே வளர்ச்சிக்கான திட்டம் - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS அண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு
  • BREAKING-NEWS ”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு

கர்நாடகாவை ஆளப்போவது யார்?: விறு விறுவென நடக்கும் வாக்குப்பதிவு

voting-for-karnataka-elections-2018-begins

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. 2 தொகுதிகளுக்கு தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் 222 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தற்போது வரை 56 % வாக்குகள் பதிவாகியுள்ளது. காலையில் மந்தமாக வாக்குகள் பதிவான நிலையில், பிற்பகலில் மக்கள் அதிக அளவில் வாக்களிக்க தொடங்கியுள்ளனர்

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் 56,696 வாக்குச் சாவடிகளில் 4 கோடியே 97 லட்சம் வாக்காளர்கள் தங்கள் வாக்கை செலுத்த உள்ளனர். ஆளும் கட்சியான காங்கிரசும் எதிர்க்கட்சியான பாரதிய ஜனதாவும் தலா 222 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. ஐக்கிய ஜனதா தளம் 201 தொகுதிகளில் களம் இறங்க உள்ளது. நேர்மையான முறையில் அசம்பாவிதங்கள் ஏதுமின்றி தேர்தல் நடத்த ஏதுவாக மாநிலமெங்கும் ஒரு லட்சத்து 40 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

அடுத்தாண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்தத் தேர்தல் பார்க்கப்படுவதால் நாடே இந்த தேர்தலை உற்று நோக்குகிறது. காங்கிரஸ் ஆட்சி செய்யும் ஒரே பெரிய மாநிலம் என்பதால் கர்நாடகாவை தக்க வைக்க அக்கட்சி போராடி வருகிறது. மறுமுனையில் தென்னிந்தியாவில் ஒரு மாநிலத்திலாவது அரியணையில் அமரும் வேகத்தில் பாஜக களமிறங்கியுள்ளது. கடந்த 33 ஆண்டுகளில் கர்நாடகாவில் எந்த ஒரு கட்சியும் தொடர்ந்து 2வது முறையாக ஆட்சி அமைத்தது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கர்நாடகாவை ஆளப்போவது யார் என்பது வரும் 15ம் தேதி மதியம் தெரிந்துவிடும்.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close